Intentar ORO - Gratis
மேலாண்மையின் போக்கும் நோக்கும்!
Dinamani Chennai
|February 26, 2025
அரசாளும் முறையை ஆங்கிலேயர் வகுத்தபோது ஆளப்படும் மக்களுக்கு இடர் அமையாத வண்ணம், காலதாமதம் ஏற்பட்டாலும் முடிந்தவரை எல்லா நிலைகளிலும் அலுவலரமைப்பைக் கொண்டு உதவும் வழிமுறையை வகுக்க வேண்டுமென்று கருதி ஆட்சிநெறிக்கு விதிமுறைகளை அமைத்தனர்.
-
மக்கள்தொகை பெருகப் பெருக துறைகளும், பிரிவுகளும், விதிமுறைகளும் அளவின்றிப் பெருகின. காலப்போக்கில் விதிமுறைகள் என்ற பெரிய வலைக்குள் அகப்பட்டு ஆட்சியாளர்களும் மக்களும் சிக்கித் தவித்து உழல்வது என்ற சூழலுக்கு உட்பட்டுவிட்டனர்.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நாளில் டாக்டர் அம்பேத்கர் கூறிய ஒரு கருத்தை இங்கே நாம் நினைவு கூரலாம். "அரசியலமைப்புச் சட்டம், சட்ட சபை நிர்வாகம், நீதிமன்றம் போன்ற அரசின் அங்கங்களைத்தான் நம்மால் வடிவமைக்க முடியும். மக்கள் தாங்கள் விரும்பும் அரசியலை நடத்த, அவர்கள் தேர்ந்தெடுக்கும் அரசியல் கட்சிகளை ஒட்டியே இந்த அமைப்புகள் செயற்படும். மக்களும் அரசியல் கட்சிகளும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை நாம் உறுதிசெய்ய முடியவில்லை.
இந்தியர்கள் தங்களுடையசொந்தக் கருத்துகளைவிடத் தம் நாட்டை உயர்வாக எண்ணுவார்களா, அல்லது நாட்டைவிடத் தங்கள் சொந்தக் கருத்துகளையே உயர்வாக மதிப்பார்களா என்பதில் தெளிவில்லை. நாட்டைவிடத் தங்கள் கட்சிக் கொள்கைகளை அதிகமாகப் போற்றினால், நாம் முயன்று பெற்ற விடுதலை மீண்டும் ஒரு முறை இடருக்கு இரையாகும். ஏன் இழந்து விடவும் நேரும். இதனை உணர்ந்து நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கமாகும்''.
நல்ல முறையில் மக்களாட்சி இயங்க சட்டங்களும், விதிகளும் நெறிமுறைகளும் பெருந்துணையாகும். எனினும் மனித வாழ்க்கையை விதிகளுக்குள் சிறைப்படுத்த முடியாது. எனவே விதிவிலக்குகளும் பல நிலைகளில் வேண்டும். ஆனால் விதிவிலக்குகள், விதி செய்ததன் நோக்கத்தையே விழுங்கிவிடக் கூடாது.
"இனி ஒரு விதி செய்வோம்' என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அதை எந்த நாளும் காப்போம் என்று பாரதியாரும், "முறை செய்து காப்பாற்றும் மன்னவன்' எனக் காட்டி மன்னன் தான் வகுத்த முறையை நிலைக்கச்செய்ய வேண்டும் என்று திருவள்ளுவரும் வலியுறுத்துகின்றனர். மக்களாட்சியில் முறை செய்யும் மன்னனும், மக்களேயாவர். எனவே முறையைக் காப்பாற்றும் பொறுப்பும் மக்களுக்கு உண்டு.
நல்ல முறையில் மக்களாட்சி இயங்க சட்டங்களும், விதிகளும் நெறிமுறைகளும் பெருந்துணையாகும். எனினும் மனித வாழ்க்கையை விதிகளுக்குள் சிறைப்படுத்த முடியாது. எனவே விதிவிலக்குகளும் பல நிலைகளில் வேண்டும். ஆனால் விதிவிலக்குகள், விதி செய்ததன் நோக்கத்தையே விழுங்கிவிடக் கூடாது.
Esta historia es de la edición February 26, 2025 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Chennai
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை
எடப்பாடி பழனிசாமி சூசகம்
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Chennai
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை
புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Translate
Change font size

