Intentar ORO - Gratis
“வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025” விழாவில் வேளாண்மை, சார்புத் துறைகளின் கண்காட்சி
DINACHEITHI - NELLAI
|June 12, 2025
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (11.6.2025) ஈரோடுமாவட்டம், பெருந்துறை- விஜயமங்கலம் பகுதியில், வேளாண்மை-உழவர்நலத்துறை சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள "வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்-2025" கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டு , கருத்தரங்கத்தினைத் தொடங்கி வைத்தார்.
-
வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய இரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வினை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் முதன்முறையாக 27.7.2023 அன்று திருச்சிராப்பள்ளியில் "வேளாண் சங்கமம் - 2023" கண்காட்சியை திறந்து வைத்தார்.
இக்கண்காட்சியானது, உயர் விளைச்சல் தரவல்ல புதிய இரகங்கள், பாரம்பரிய நெல் இரகங்கள், வருமானத்தை பெருக்க வேளாண் நவீன தொழில்நுட்பங்கள், உத்திகள், நவீன வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள், செயல் விளக்கங்கள், விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் முறைகள், தொழில்நுட்பங்கள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன், பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்தான கருத்தரங்குகள், உழவன் செயலி பதிவிறக்கம், திட்டபலன் முன்பதிவுகள் போன்ற வேளாண்மை தொடர்புடைய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை- விஜயமங்கலம் பகுதியில் இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், உயர்விளைச்சல் தரவல்ல புதிய பயிர் இரகங்கள், அறுவடை பின்சார் மேலாண்மை நுட்பங்கள், மதிப்புக்கூட்டும் நுட்பங்கள், வேளாண்மையில் மின்னணு தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தும் நுட்பங்கள், உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய இரகங்களைப் பரவலாக்குதல், உணவு பதப்படுத்துதல், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு நுட்பங்கள், பயிர்க்கடன், பயிர்க்காப்பீடு உள்ளிட்ட சேவைகள், ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வு போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தற்போதைய அனைத்து விவரங்களையும் உழவர்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள் இயற்கை நல ஆர்வலர்கள் ஆகியோர் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளும் வகையில் "வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - 2025" 11.06.2025 மற்றும் 12.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும்.
Esta historia es de la edición June 12, 2025 de DINACHEITHI - NELLAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுவிப்பு
டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min
February 28, 2026
DINACHEITHI - NELLAI
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்
, அ. தி. மு. க. , நா.
1 mins
February 28, 2026
DINACHEITHI - NELLAI
பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வருகை - திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
1 mins
February 28, 2026
DINACHEITHI - NELLAI
ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.
1 min
February 28, 2026
DINACHEITHI - NELLAI
நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது
1 min
February 27, 2026
DINACHEITHI - NELLAI
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை
மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை
1 mins
February 26, 2026
DINACHEITHI - NELLAI
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்
உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
1 min
February 25, 2026
Translate
Change font size

