“வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025” விழாவில் வேளாண்மை, சார்புத் துறைகளின் கண்காட்சி
DINACHEITHI - NELLAI
|June 12, 2025
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (11.6.2025) ஈரோடுமாவட்டம், பெருந்துறை- விஜயமங்கலம் பகுதியில், வேளாண்மை-உழவர்நலத்துறை சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள "வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்-2025" கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டு , கருத்தரங்கத்தினைத் தொடங்கி வைத்தார்.
-
வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய இரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வினை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் முதன்முறையாக 27.7.2023 அன்று திருச்சிராப்பள்ளியில் "வேளாண் சங்கமம் - 2023" கண்காட்சியை திறந்து வைத்தார்.
இக்கண்காட்சியானது, உயர் விளைச்சல் தரவல்ல புதிய இரகங்கள், பாரம்பரிய நெல் இரகங்கள், வருமானத்தை பெருக்க வேளாண் நவீன தொழில்நுட்பங்கள், உத்திகள், நவீன வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள், செயல் விளக்கங்கள், விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் முறைகள், தொழில்நுட்பங்கள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன், பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்தான கருத்தரங்குகள், உழவன் செயலி பதிவிறக்கம், திட்டபலன் முன்பதிவுகள் போன்ற வேளாண்மை தொடர்புடைய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை- விஜயமங்கலம் பகுதியில் இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், உயர்விளைச்சல் தரவல்ல புதிய பயிர் இரகங்கள், அறுவடை பின்சார் மேலாண்மை நுட்பங்கள், மதிப்புக்கூட்டும் நுட்பங்கள், வேளாண்மையில் மின்னணு தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தும் நுட்பங்கள், உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய இரகங்களைப் பரவலாக்குதல், உணவு பதப்படுத்துதல், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு நுட்பங்கள், பயிர்க்கடன், பயிர்க்காப்பீடு உள்ளிட்ட சேவைகள், ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வு போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தற்போதைய அனைத்து விவரங்களையும் உழவர்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள் இயற்கை நல ஆர்வலர்கள் ஆகியோர் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளும் வகையில் "வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - 2025" 11.06.2025 மற்றும் 12.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும்.
このストーリーは、DINACHEITHI - NELLAI の June 12, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - NELLAI からのその他のストーリー
DINACHEITHI - NELLAI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - NELLAI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - NELLAI
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 14, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 14, 2025
DINACHEITHI - NELLAI
முன்னாள் மத்திய மந்திரி சிவராஜ் பாட்டீல் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
1 min
December 13, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
விரிவாக்கம் திட்டத்தை, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
December 13, 2025
DINACHEITHI - NELLAI
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.11,718 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ .
1 min
December 13, 2025
DINACHEITHI - NELLAI
ரஜினிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்
1 min
December 13, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் 3 நாட்கள் நீடிப்பு
19-ந் தேதி மாதிரி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 12, 2025
DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min
December 11, 2025
Translate
Change font size

