Intentar ORO - Gratis
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம்
DINACHEITHI - KOVAI
|May 26, 2025
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர -மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
-
மாநில துணைச் செயலாளர்கள் எஸ். ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா. இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ. பிரகாஷ், பிரபு கஜேந்திரன், பி.எஸ். சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி. ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் திருச்சியில் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1: பெகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி மக்களுக்கு, அஞ்சலி
பெகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி பொது மக்களுக்கும், ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளும் கழக இளைஞர் அணி நிர்வாகிகளின் இந்தக் கூட்டம், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு, பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
'மக்கள் பிரதிநிதிகளால் நடத்தப்படும் சட்டப் பேரவையைவிட, ஆளுநர் என்பவர் மேலானவர் அல்ல' என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலவரம்பை நிர்ணயம் செய்ததுடன், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய 10 மசோதாக்களுக்கும், ஒப்புதல் வழங்கிய மாண்பமை உச்சநீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களின் உரிமைகளையும் நிலைநாட்டும்வகையில், இந்திய நீதித்துறை வரலாற்றில், முன் உதாரணமான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பைப் பெற்றுத்தந்த கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்தக் கூட்டம், பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 3: கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமாகச் செயல்படும் அரசியல் சக்திகளுக்குக் கண்டனம்
மாநில உரிமைகளுக்கான மைல்கல்லாக விளங்கும் மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர், ஆகியோரைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய அரசையும், மாண்பமை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையேகேள்விக்குறியாக்கும் விதமாக குறுக்கு வழியை நாடும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமான சக்திகளையும், இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
Esta historia es de la edición May 26, 2025 de DINACHEITHI - KOVAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
1 min
January 09, 2026
DINACHEITHI - KOVAI
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 09, 2026
DINACHEITHI - KOVAI
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.
1 min
January 08, 2026
DINACHEITHI - KOVAI
சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
1 min
January 08, 2026
DINACHEITHI - KOVAI
உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
1 min
January 07, 2026
DINACHEITHI - KOVAI
ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி
முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 07, 2026
DINACHEITHI - KOVAI
வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
1 min
January 06, 2026
DINACHEITHI - KOVAI
தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்
இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
DINACHEITHI - KOVAI
வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்
டிரம்ப் அதிரடி அறிவிப்பு
1 min
January 04, 2026
DINACHEITHI - KOVAI
தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்
லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்
1 mins
January 04, 2026
Translate
Change font size
