Poging GOUD - Vrij
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம்
DINACHEITHI - KOVAI
|May 26, 2025
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர -மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
-
மாநில துணைச் செயலாளர்கள் எஸ். ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா. இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ. பிரகாஷ், பிரபு கஜேந்திரன், பி.எஸ். சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி. ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் திருச்சியில் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1: பெகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி மக்களுக்கு, அஞ்சலி
பெகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி பொது மக்களுக்கும், ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளும் கழக இளைஞர் அணி நிர்வாகிகளின் இந்தக் கூட்டம், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு, பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
'மக்கள் பிரதிநிதிகளால் நடத்தப்படும் சட்டப் பேரவையைவிட, ஆளுநர் என்பவர் மேலானவர் அல்ல' என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலவரம்பை நிர்ணயம் செய்ததுடன், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய 10 மசோதாக்களுக்கும், ஒப்புதல் வழங்கிய மாண்பமை உச்சநீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களின் உரிமைகளையும் நிலைநாட்டும்வகையில், இந்திய நீதித்துறை வரலாற்றில், முன் உதாரணமான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பைப் பெற்றுத்தந்த கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்தக் கூட்டம், பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 3: கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமாகச் செயல்படும் அரசியல் சக்திகளுக்குக் கண்டனம்
மாநில உரிமைகளுக்கான மைல்கல்லாக விளங்கும் மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர், ஆகியோரைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய அரசையும், மாண்பமை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையேகேள்விக்குறியாக்கும் விதமாக குறுக்கு வழியை நாடும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமான சக்திகளையும், இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
Dit verhaal komt uit de May 26, 2025-editie van DINACHEITHI - KOVAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
தமிழ்மண்ணில் நின்று “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்” என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
மத்திய மந்திரிகளுக்கு மு.க. ஸ்டாலின் சவால்
1 min
April 07, 2026
DINACHEITHI - KOVAI
மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
நாளை மனுக்கள் பரிசீலனை
1 mins
April 06, 2026
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் உச்சம் தொட்ட மின்சார பயன்பாடு- ஒரே நாளில் 43.47 கோடி யூனிட் பயன்பாடு
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் கடைசி மற்றும் மே மாதங்களில் மின்சார பயன்பாடு அதிகமாக இருக்கும்.
1 min
April 06, 2026
DINACHEITHI - KOVAI
தி.மு.க. கூட்டணி கட்சி சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தி அ. தி. மு. க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் இரவு பிரசாரம் செய்தார்.
1 mins
April 06, 2026
DINACHEITHI - KOVAI
காமராஜருக்கு மகனைப் போன்று இறுதிச் சடங்குகளை செய்தவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் பிரசாரம்
விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
1 min
April 06, 2026
DINACHEITHI - KOVAI
நாளை மனுக்கள் பரிசீலனை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
1 mins
April 06, 2026
DINACHEITHI - KOVAI
தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பார்க்கலாம்
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான குற்ற பின்னணி என்ன?
1 mins
April 05, 2026
DINACHEITHI - KOVAI
மதவெறி பார்வையுடன் செயல்படும் மத்திய பாஜக அரசின் செயல் மனித குலத்திற்கே எதிரானது
மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்
1 min
April 05, 2026
DINACHEITHI - KOVAI
சென்னையில் வெப்ப அளவு உயரும்: வானிலை நிலையம் அறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
1 min
April 05, 2026
DINACHEITHI - KOVAI
வேட்பாளர்கள் மீதான குற்ற பின்னணி என்ன?
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களில் தேர்தல்
1 mins
April 05, 2026
Translate
Change font size
