Intentar ORO - Gratis
பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்
Champak - Tamil
|December 2025
வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.
-
"இடம்பெயர்வுத் துறை மகா பறவை'' தன் பொன்னிற பித்தளை கதவுகளைத் திறந்தது.
மேலே ஒரு பொற்பலகை ஜொலித்தது: “பேரடைஸ் ஏரி, இந்தியா. சன்ஷைன், சமோசா - சீரோ ஸ்னோ!” பிரவேச அரங்கம் பறவை சந்தையைப் போல குலுங்கியது.
கொக்குகள் வரிசையில் காகிதம் பிடித்து நின்றன, கிளிகள் இங்க் பேடுக்காக சண்டை போட்டன, புறாக்கள் தங்கள் டோக்கனைத் தொலைத்தன, ஒரு காகம் "எக்ஸ்பிரஸ் ஸ்டாம்பிங்! பாதி விலை!” என்று கத்தினது.
ஒரு கடற்பறவை தும்மி விட்டு விசா படிவங்கள் மேல் மைத்துளியை விட, அந்தத் துறையின் ‘முதல் பனி' அதிகாரப்பூர்வமாக விழுந்தது.
"காகிதத்தைக் கவனிங்க!'' என்று ஒரு கோபக்கார வாத்து கத்தியது.
மகோகனி மேசையின் பின்னால் பெருமையாக நின்றார் “பெலிகன் பட்டி-இடம்பெயர்வு துறையின் தலைமை பொறுப்பாளர். உயரமானவர், கடுமையானவர், அவரது அலகில் காலை சூரியன் பிரதிபலிக்கும் அளவு பளபளப்பானவர். அவரது குரல் மிக உயர்ந்தது-இடிக்கும் இடியும்” இவரை, சார்! என்று சொல்லும்!
“அடுத்த விண்ணப்பதாரர்!” அவர் உரத்துக் கேட்டார். “பாஸ்போர்ட் இல்லேனா பேரடைஸ் கிடையாது!”
மெதுவாக வந்தான் டக்கி-கனவு கண்களுடன் கூடிய ஒரு உருண்டையான குட்டி வாத்து. ஒவ்வொரு வருடமும் இடம்பெயர்வைத் தவறவிட்டவன்தான். நடுவே தூங்கிவிடுவது காரணம். ஆனால் இந்த முறை இல்லை.
அவனின் பின்னால் மினி மைனா, ரீஸ் ரோசி ஸ்டார்லிங், லோலா சிட்டுக்குருவி -அவரது நண்பர்கள்-அவன் காது அருகே ரகசிய ரெசிபி போல ஒரு ஊக்கப்பாடலை மெல்லிசையாக சொன்னார்கள். அவர்கள்-ஹவாய் ஹீரோஸ்.
பட்டி டக்கியின் படிவத்தை கூர்ந்து பார்த்தார். “இடம்பெயர்வின் காரணம்?”
டக்கி சிந்தித்து, “சூரிய ஒளி அனுபவிக்க, நல்ல ஸ்நாக்ஸ் சாப்பிட.. என்னை நான் கண்டுபிடிக்க?” என்றான்.
பட்டியின் இறகுகள் புடைத்தன. “இது ஆசிரமமா? ஒன்று தேர்வு செய்-பறத்தல், சாப்பாடு அல்லது தூக்கம்!”
“அம்மா மூன்றும் செய்றேன்!” என்று டக்கி பிரகாசமாகக் கத்தினான்.
பட்டி ஆழமாக சுவாசித்தார்; கண்ணாடி மூடுபனியாகியது. “சரி! ஆனா நீ ‘பறவையின் ஃபிட்னஸ் டெஸ்ட்’ பாஸ் ஆகணும். சும்மா பறக்க முடியாது!”
டக்கி சல்யூட் அடித்து தன்னுடைய இறக்கையால் தன் நெற்றியில் அடித்து, ஒற்றை இறகைப் பறக்கவிட்டது.
அடுத்த நாள் காலையில் பனி, இறகு, ஆர்வம்-அனைத்தும் கலந்த காற்று.
Esta historia es de la edición December 2025 de Champak - Tamil.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Champak - Tamil
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Champak - Tamil
மெர்ரி-கோ-சர்ப்ரைஸ்!
ஜாக்ரிதியின் பிறந்தநாள் வரப்போகுது. நாம என்ன பண்ணலாம்?” ஜாக்ரிதி கைகளை கழுவப் போனவுடன் ஷெஃபாலி மெதுவாகக் கேட்டாள். புதிய பள்ளிக்கு வந்த சில மாதங்களிலேயே, ஜாக்ரிதி நல்ல நண்பர்களை பெற்றிருந்தாள்.
2 mins
November 2025
Champak - Tamil
நட்பின் வாக்குறுதி
பத்து வயது நிதேஷுக்கு அவனுடைய கிளி போபோ மீது அளவில்லா பாசம். போபோ அந்த வீட்டின் செல்லக்குட்டி. அவனுடைய கூண்டு முற்றத்தில் தொங்கிக் கொண்டிருந்தது; வீட்டுக்கு வருகிற ஒவ்வொருவரும் முதலில் அவனுக்கு ஹாய் சொல்லுவார்கள். பதிலுக்கு, போபோவும் ஒவ்வொருவரையும் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பான். நிதேஷின் அம்மா ரோஹிணி, அவனுக்கு சில வார்த்தைகளை கற்றுத்தந்திருந்தார். எனவே, யாராவது விருந்தினராக வந்தால், உடனே போபோ “ஹலோ!” என்று சொல்லி எல்லோரின் மனத்தையும் கவர்ந்து விடுவான்.
3 mins
November 2025
Champak - Tamil
உன் தோழமை-எனக்காக
பள்ளிக்குப் போகும் வழியில், “யிப். .யிப்..” என்ற மெதுவான குரல் ஷிவானியை நிறுத்தியது.
2 mins
August 2025
Champak - Tamil
குறும்புடன் ரக்ஷாபந்தன்
தனய்! என் சடை முடியை ஏன் மீண்டும் இழுத்தாய்?” என்று எட்டு வயதான ஜான்வி கோபமாகக் கூச்சலிட்டாள். அவள் கண்களில் கண்ணீர், புருவத்தில் கோபம், ஓடி அம்மாவிடம் சென்றாள்.
2 mins
August 2025
Champak - Tamil
நட்பின் நிழலில்
மழைக்காலம். வகுப்பறை ஜன்னல்களில் தட்டித் தட்டிக் கொட்டும் மழைத்துளிகள். ஹிந்தி பாட நேரம் ஆரம்பம் ஆனது. குழந்தைகள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.
3 mins
August 2025
Champak - Tamil
நியோவின் ரோபான்டு
பள்ளியின் டெக் ப்ளாக்கில் ஒரு புதிய வகுப்பு துவங்க ஆயத்தமானது - செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ்.
2 mins
August 2025
Listen
Translate
Change font size
