Try GOLD - Free
பாரம்பரிய அரிசிகளில் பிஸ்கெட்!
Thozhi
|16-31, July 2025
குழந்தைகளுக்கு இன்னிக்கு என்ன லஞ்ச் பாக்சில் கட்டிக் கொடுக்கலாம், ஸ்நாக்ஸ் என்ன கொடுப்பது, காலை சிற்றுண்டிக்கு என்ன செய்யலாம்..?
இப்படி தினம் தினம் யோசிப்பதே அம்மாக்களுக்கு ஒவ்வொரு நாளும் சவால்தான். அதே சமயம் கடையில் விற்கப்படும் பிஸ்கெட் மற்றும் கேக் போன்ற உணவுகளை வாங்கிக் கொடுத்தாலுமே அது உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும்.
அதே நேரம் ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிக்க இயற்கை சார்ந்த உணவு வகைளை செய்து கொடுப்பதும் கடினமாகத்தான் இருக்கிறது என்று அலுத்துக் கொள்ளும் அம்மாக்களுக்கா கவே 'நன்சுவை' பெயரில் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் சுவையான பிஸ்கெட்டுகளை தயாரித்து வருகிறார் சேலத்தைச் சேர்ந்த காயத்ரி விமல்ராஜ்.
“சேலம் அருகேயுள்ள சன்னியாசி குண்டு கிராமம்தான் என் சொந்த ஊர். நானும் என் கணவரும் முதுகலைப் பட்டதாரிகள். இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் போது காதல் வயப்பட்டு வீட்டில் உள்ள பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
நாங்க இருவரும் பிசினஸ் செய்து வருகிறோம். என் அப்பா, அம்மா இருவரும் டெய்லரிங் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் நானும் அதனை கற்றுக்கொண்டு தொழிலாக செய்து வந்தேன். என் கணவர் காளான், பனீர் போன்றவற்றை மொத்த விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்தார்.
ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இயற்கை மீது கொண்ட பற்று காரணமாகவும், பல தேடுதல்களுக்குப் பிறகு டாக்டர் பஸ்லூர் ரகுமான் அவர்களின் உடல் நலம் குறித்த புரிதல்களை தெரிந்து கொண்டோம். அதன் மூலம் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் அவர்களின் இயற்கை உணவுப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள், அதன் மருத்துவ குணங்களை கற்றுக் கொண்டோம். அது சார்ந்த நிறைய புத்தகங்களை படித்தோம், செய்திகளை சேகரித்தோம். அதில் தினசரி வாழ்வில் பாரம்பரிய அரிசி வகைகளை எளிய முறையில் தின்பண்டங்களாக கொடுக்க முடியும் என்று தெரியவந்தது.
This story is from the 16-31, July 2025 edition of Thozhi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Thozhi
Thozhi
பாரிலே நாளைய சரிதம் நாம்!
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.
2 mins
16-30, Nov 2025
Thozhi
மாரடைப்பைத் தவிர்க்க!
பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
First Lady of New York City
தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
ராமநாதபுரம் to தாய்லாந்து
மிஸ் ஹெரிடேல்
1 mins
16-30, Nov 2025
Thozhi
கையாறு நதி
பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
நாங்களும் மனிதர்களே
“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”
4 mins
16-30, Nov 2025
Thozhi
போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!
உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!
அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!
“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
2 mins
16-30, Nov 2025
Translate
Change font size
