Try GOLD - Free
தூக்கம் ஏன் கெடுகிறது?
Kanmani
|June 24, 2026
பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.
இவற்றை உரிய நேரம், காலத்தில் சரி செய்தால் நாமும் சரியாக வாழலாம். இல்லையேல் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பது தான் உறுதியான அறிவியல் உண்மை. தூக்க இழப்பு பல மனநலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். சிந்தனை, நினைவாற்றல் கற்றல் செயல்பாடுகளை பாதிக்கும்.
தூக்கத்தை இழக்கும்போது சரும ஆரோக்கியம் கெட்டு மேனியின் பொலிவு குன்றுகிறது. போதுமான அளவு தூங்காதவர்களுக்கு அதிக மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், சீரற்ற சரும நிறம் மற்றும் சருமத்தில் குறிப்பிடத்தக்க தளர்வு ஆகியவை இருந்ததாக சரும நிபுணர்களின் ஆய்வின் முடிவுகள் தெரிவித்தன.
தூக்கமின்மையால்தான் பெரிதும் சாலை விபத்து நேரிடுகிறது. ஒவ்வொரு இரவும் 6 மணிநேரத்துக்கும் குறைவாகத் தூங்கினால் வாகன விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாவதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதயம் தொடர்பான ஐரோப்பிய இதழில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வின்படி:-குறைந்த நேர உறக்கம் (இரவு 5 மணி நேரத்திற்கும் குறைவானது) மற்றும் நீண்ட நேர உறக்கம் (இரவு 9 மணி நேரத்துக்கு மேற்பட்டது) ஆகிய இரண்டுமே இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஓர் இரவு தூக்கத்தை தவறவிட்டால் கூட, அறிவாற்றல் சிக்கல் ஏற்படக்கூடும்.
'ஸ்லீப் 'என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில்:- உயர் செயல்திறன் கொண்ட உயர்நிலைப் பள்ளி இளம் பருவத்தினரிடம் கூட அகநிலை விழிப்புணர்வு குறைவது தெரிய வந்தது. ஒரு வாரத் தூக்கமின்மைக்கு பின்பு சில இரவுகள் கூடுதலாக தூங்கி ஓய்வெடுத்தபோதிலும், அவர்களால் தங்களின் சிந்தனை மற்றும் நினைவாற்றல் திறனை முழுமையாக மீட்டெடுக்க முடியவில்லை.
ஒரு வார காலத்திற்கு தூக்கத்தை இழந்தவர்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்ததை ஆய்வில் காணமுடிந்தது. 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குவது, பாலியல் ஹார்மோன் அளவை 10% முதல் 15% வரை குறைத்தது.
மூளையில் கற்கும் விஷயங்களை ஒருங்கிணைக்கும் செயல்முறைக்கு தூக்கம் இன்றியமையாதது. புதிய தகவல்களை உள்வாங்கி அவற்றை நினைவில் பதிய வைக்க நமக்கு முறையான ஓய்வு தேவை. தொடர்ச்சியாக ஒவ்வொரு இரவும் ஓய்வு தடைபட்டால், ஒட்டுமொத்த சுறுசுறுப்பும் குறைகிறது.
This story is from the June 24, 2026 edition of Kanmani.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Kanmani
Kanmani
நடிகனாக விடைபெற்ற இமயம்!
தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.
3 mins
June 24, 2026
Kanmani
மூன்றெழுத்து மந்திரம்!
நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.
3 mins
June 24, 2026
Kanmani
தூக்கம் ஏன் கெடுகிறது?
பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.
3 mins
June 24, 2026
Kanmani
ஹபீபி
கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.
1 mins
June 24, 2026
Kanmani
மண்ணின் பிள்ளை!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.
2 mins
June 24, 2026
Kanmani
தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !
விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.
1 min
June 24, 2026
Kanmani
எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி
சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
June 24, 2026
Kanmani
டபுள் ஆக்ஷன்
குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
1 mins
June 24, 2026
Kanmani
வெண்டை புளி குழம்பு!
சமையல்
1 mins
June 24, 2026
Kanmani
கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!
இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.
2 mins
June 24, 2026
Listen
Translate
Change font size
