Try GOLD - Free

“மேல் உலகத்தில் இருந்து சம்பந்தன் நிச்சயம் கண்ணீர் வடிப்பார்”

Tamil Mirror

|

July 17, 2025

தமிழ்த் தேசத்தின் அடையாளமாக சர்வதேசத்தினால் பார்க்கப்பட்டவரும் தமிழ்த் தேசியப் பெருந்தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் முன்னாள் தலைவருமான இரா. சம்பந்தன் காலமாகி கடந்த 30ஆம் திகதி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அவரைத் தமிழ்த் தேசமோ அவரின் கட்சியினரோ நினைவு கூரவில்லை என்ற விடயம் சில சம்பந்தன் விசுவாசிகளினால் முன்வைக்கப்பட்ட நிலையில், திருகோணமலை மாவட்ட எம்.பி. குகதாசன். யாழ். மாவட்ட எம்.பி. சிறீதரன் ஆகியோரினால் அவசர அவசரமாகச் சிறிய நினைவஞ்சலி நிகழ்வுகள் அதன் பின்னர் நடத்தப்பட்டன.

- முருகானந்தன் தவம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 48ஆவது ஆண்டு நினைவு தினம் கூட, அண்மையில் மிகச் சிறப்பாகத் தமிழரசுக் கட்சியினராலும், தமிழ் மக்களினாலும் அனுட்டிக்கப்பட்ட நிலையில், அதே தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்து காலமான இரா. சம்பந்தனின் முதலாம் வருட நினைவு தினம் தமிழரசுக் கட்சியினாலோ தமிழ் மக்களினாலோ நினைவு கூரப்படாமல் மறக்கப்பட்டமை சம்பந்தனின் தலைமைத்துவம் தொடர்பான பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது.

5 பெப்ரவரி 1933இல் பிறந்து 1977 ஜூலை 21ஆம் திகதி நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு 15,144 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுப் பாராளுமன்ற உறுப்பினரானது முதல் 30 ஜூன் 2024 வரை தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாதவராகத் தமிழர் தலைவராக விளங்கிய சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இதற்கு முன்னரான எந்தவொரு தமிழ் அரசியல் தலைவருக்கும் ஏற்பட்டிருக்கவில்லை

சம்பந்தன் காலமாகி கடந்த 30-06-2025 ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அவரைத் தமிழினமும் அவரின் உயிர்மூச்சான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அதன் தற்போதைய தலைவர்களும் முற்றாக மறந்து விட்டதுதான், வெறுத்து விட்டது தான் காலக்கொடுமை.

சம்பந்தன் மரணித்து ஒரு வருடத்திற்குள் அவரை அனைத்துத் தரப்பினரும் முற்றாகவே மறந்து விட்டனர். வெறுத்து விட்டனர். எந்தவொரு இடத்திலும் அவரின் முதலாம் ஆண்டு நினைவாக எந்தவொரு நிகழ்வுகளும் இடம்பெறவில்லை. எந்தவொரு ஊடகத்திலும் ஒரு சிறு ஆக்கமாவது அவரைப்பற்றிய பிரசுரமாகவில்லை. அவரின் கட்சியினர் கூட நினைவஞ்சலிகளை நடத்தவில்லை. இது தமிழர்களின் மறைந்த எந்தவொரு தலைவருக்கும் ஏற்படாத துர்ப்பாக்கியம். அவமானம், புறக்கணிப்பு.

சம்பந்தனை அவரது கட்சியினரே நினைவு கூரவில்லையென விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரின் திருகோணமலை மாவட்டத்தின் தற்போதைய எம்.பி.யுமான குகதாசன், சம்பந்தனின் முதல் வருட நினைவு தினம் வந்து, ஒரு வாரத்தின் பின்னர் அவசர அவசரமாக ஒரு சிறிய நினைவு நிகழ்வை ஒருவருக்கும் தெரியாமல் நடத்தி முடித்துள்ளார். ஆனால், அதே குகதாசன் முன்னாள் எம்.பி., தங்கதுரையின் 28ஆவது ஆண்டு நினைவு தினத்தைக் கடந்த 5ஆம் திகதி சிறப்பாக நினைவு கூர்ந்திருந்தார்.

MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size