Try GOLD - Free
இளம்பெண்களின் இசை பிரவாகம்!
Dinamani Tirunelveli
|October 12, 2025
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து 'பிரவாகம்' என்ற இசைக் குழுவைத் தொடங்கி, நாடு முழுவதும் இசை மழை பொழிந்து வருகிறார்கள். கர்நாடக சங்கீதம், மெல்லிசை, இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசை நிகழ்ச்சி என வெவ்வேறு வடிவங்களில் இந்தக் குழுவினர் வழங்கி வரும் புதுமையான நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. அவர்களைச் சந்தித்துப் பேசினோம்:
'பிரவாகம்' இசைக் குழுவை எப்போது ஆரம்பித்தீர்கள்?
இசையில் ஆர்வமுடைய இளம் பெண் இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து, 2017-ஆம் ஆண்டு 'பிரவாகம்' இசைக் குழுவை ஆரம்பித்தோம். எங்கள் குழுவில் நாங்கள் மொத்தம் நான்கு பேர் இருக்கிறோம். ஜனனி ஹம்சினி, வாய்ப்பாட்டு கலைஞர். அஞ்சனி சீனிவாசன், வீணை வாசிப்பார். ரங்கப்பிரியா, வயலின் இசைக் கலைஞர். அஸ்வினி, மிருதங்கம் மற்றும் கொன்னக்கோல் வாசிப்பார். இதுதவிர, தேவைக்கேற்ப பெண் இசைக் கலைஞர்களையும் எங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டு இசைக் கச்சேரிகளை வழங்கி வருகிறோம். நாடு முழுவதிலும் இதுவரை சுமார் 300 இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். அதில் கோயில் கச்சேரிகள், கல்யாணக் கச்சேரிகள், சபா கச்சேரிகள், மெல்லிசைக் கச்சேரிகள் போன்றவையும் அடங்கும். முழுக்க முழுக்க இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தியும் இசை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம்.நீங்கள் வழங்கியிருக்கும் குறிப்பிடத்தக்க இசை நிகழ்ச்சிகள்?
மயிலை கபாலீஸ்வரர் ஆலயம், சென்னை ஆர்.ஆர். சபா, பெங்களூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் போன்ற இடங்களில் நடத்திய இசைக் கச்சேரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். சென்னை பாரத் கலாச்சாரில் நடந்த மார்கழி உற்சவம் நிகழ்ச்சியிலும், திருச்சி மார்கழி உற்சவம் நிகழ்ச்சியிலும், சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியிலும் வழங்கிய கச்சேரிகள் என்றென்றும் மறக்க முடியாதவை.This story is from the October 12, 2025 edition of Dinamani Tirunelveli.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
அகல் சுடரும் அறப்பயணமும்...
வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.
3 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
இந்தியா- ஸ்லோவாக்கியா இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள்
பிரதமர் மோடி முன்னிலையில் கையொப்பம்
2 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு
ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
ரூ.25,000 கோடியை கடந்த ரெப்கோ வங்கி வர்த்தகம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி, கடந்த 2025-26 நிதியாண்டில் அனைத்து வணிகப் பிரிவுகளிலும் சேர்த்து ரூ.25,246 கோடி வர்த்தகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
கல்வி உதவித் தொகை வழங்குவதாக மோசடி அழைப்புகள்
பெற்றோருக்கு கல்வித் துறை எச்சரிக்கை
1 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
'கீர்த்தி சக்ரா' விருது பெற்ற ராணுவ வீரருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.48 லட்சம்
முதல்வர் விஜய் வழங்கினார்
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
பரிசுகளை ஏற்பதில் கவனம் தேவை!
ம னிதர்களிடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அன்பும் கனிவும் மிக்க வார்த்தைகளைப் போல பரிசளித்தல் எனும் பண்பின் பங்கும் அளப்பரியது.
2 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல்: பொறியாளர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை லாரி மீது கார் மோதியதில் பொறியாளர்கள் 2 பேர் உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது இந்திய எரிவாயுக் கப்பல்
மேற்காசியாவில் போர்ப் பதற்றம் தணிந்ததையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை திரவ எரிவாயு ஏற்றி வந்த இந்திய கப்பல் 'திசா' திங்கள்கிழமை பாதுகாப்பாகக் கடந்தது.
1 min
June 16, 2026
Translate
Change font size

