Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பாரதியியலில் சாதித்ததும் இனி சாதிக்க வேண்டியதும்!

Dinamani Thanjavur

|

October 19, 2025

மகாகவி பாரதியார் குறித்து பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அவரது அரிய படைப்புகளைத் தேடிக்கண்டுபிடித்து தமிழக மக்களுக்கு அளித்தவர், பாரதி ஆய்வாளர் சீனி. விஸ்வநாதன். 91 வயதாகும் இவர், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதியியல் ஆய்வாளராக இடைவிடாது இயங்கி வருகிறார். இவரது பாரதி பணிகளைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு 'பாரதி விருது' வழங்கிப் பெருமைப்படுத்தியது. தினமணி நாளிதழ் 2018-இல் மகாகவி பாரதி விருது வழங்கிச் சிறப்பித்தது. மத்திய அரசு 2025-ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.

- பாரதி ஆய்வாளர் சீனி. விஸ்வநாதன்

பாரதியியலில் சாதித்ததும் இனி சாதிக்க வேண்டியதும்!

பாரதியியல் ஆய்வாளர் சீனி.விஸ்வநாதன் இதுவரை சாதித்தது குறித்தும், சாதிக்க வேண்டியது குறித்தும் மனம் விட்டுப் பேசுகிறார்.

1960-ஆம் ஆண்டில், அதாவது என் 26-ஆவது வயதில் பாரதி நூல் பதிப்புப் பணிகளை மேற்கொண்டேன். எனக்கு இப்போது 91 வயது. சுமார் 60 ஆண்டுகள் பாரதி நூல்கள் பதிப்புப் பணிகளை மட்டுமே என் வாழ்நாள் பணியாக மேற்கொண்டு வருகிறேன். பாரதி பக்தி ஒன்றே எனக்கு வழிகாட்டியாக அமைந்தது.

ஆரம்ப காலத்தில் பாரதி தொகுப்பு நூல்களை மட்டுமே பிரசுரம் செய்து வந்தேன். பின்னர் பாரதியின் விஸ்வரூப தரிசனத்தை நன்கு புலப்படுத்திக் காட்டும் மகாகவி பாரதி வரலாற்று நூலையும், பின்னர் காலவரிசையிலான தொகுதிகளையும் வெளியிட்டேன்.

என்னுள் பாரதி சக்தியைப் பாய்ச்சிய முதல் நூல், எழுத்தாளர் கல்கி எழுதிய 'பாரதி பிறந்தார்' என்ற நூல்தான். 1952-ஆம் ஆண்டில், அதாவது, நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதுதான் ஏதேச்சையாகபாரதி எனக்குப் பரிச்சயமானார். அதுவே பின்னர் என் வாழ்க்கைப் பணியாக மாறிவிடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 1952-ஆம் ஆண்டிலிருந்து பாரதி நூல்கள் படிப்பாளனாக இருந்த நான், 1962-ஆம் ஆண்டிலேயே பாரதி நூல்களை வெளியிடும் பதிப்பாளனாக ஆனேன்.

1962-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரதியாரின் 81-ஆவது பிறந்தநாள் விழாவின்போது, அந்த மகாகவியின் மகிமைகளை விளக்கிக் காட்டும் நூல் ஒன்றை வெளியிட விரும்பினேன். அந்த வகையில், அறிஞர் பெருமக்கள் பாரதி பற்றி எழுதிய அரிய கட்டுரைகளைத் தொகுத்து 'தமிழகம் தந்த மகாகவி' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டேன். அந்த நூல் பல அறிஞர்களின் பாராட்டுதல்களைப் பெற்றது. அது தந்த உற்சாகத்தில் இனி பாரதி நூல்களை மட்டுமே பதிப்பது என்று உறுதி பூண்டேன்.

MORE STORIES FROM Dinamani Thanjavur

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம்: வட்டாட்சியர் கைது

திருச்சியில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

October 24, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

வியர்வை சிந்தும் வேலர்!

முருகப்பெருமானைக் காண பாதயாத்திரை மூலமாகவும் மலை ஏறியும் வியர்க்க வியர்க்க வரும் பக்தர்களை எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். ஆனால், தன் திருமேனி எங்கும் வியர்வை வழியக் காட்சி தரும் முருகனை சிக்கல் திருத்தலத்தில்தான் தரிசிக்க முடியும்.

time to read

1 mins

October 24, 2025

Dinamani Thanjavur

ராகு - கேது தோஷம் போக்கும் தலம்

அண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் ‘ஆண்மை ஊர்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘ஆமையூராக' மாறிய தலம், தற்போது ஆம்பூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ளது சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில்.

time to read

1 mins

October 24, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு

சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனையானது.

time to read

1 min

October 24, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

புதிய டிஜிபி பட்டியல்: தமிழக அரசு ஏற்க மறுப்பு

புதிய டிஜிபி நியமனத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

time to read

1 mins

October 23, 2025

Dinamani Thanjavur

இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?

அடிலெய்டு, அக். 22: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஒருநாள் ஆட்டம், அடிலெய்டில் வியாழக்கிழமை (அக். 22) நடைபெறுகிறது.

time to read

1 min

October 23, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

தஞ்சாவூர் மாவட்டத்தில் 6,500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த குறுவை பயிர்களும், அண்மையில் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்களும் என ஏறத்தாழ 6,500 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

October 23, 2025

Dinamani Thanjavur

அண்ணா பல்கலை. புதிய பதிவாளராக வி.குமரேசன் நியமனம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக (பொறுப்பு) பேராசிரியர் வி. குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

October 23, 2025

Dinamani Thanjavur

'சென்னை ரன்ஸ்' ஜெர்ஸி அறிமுகம்

சென்னையில் எம் ஆர்டி1 நடத்தும் சார்ஜ் பீ சென்னை ரன்ஸ் 2025 மாரத்தான் போட்டிக்கான அதிகாரபூர்வ ஜெர்ஸியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

time to read

1 min

October 23, 2025

Dinamani Thanjavur

முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் 3% வளர்ச்சி

இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 3 சதவீதமாக உள்ளது. இது ஆகஸ்டில் பதிவான 6.5 சதவீத விரிவாக்கத்தை விடக் குறைவாகும்.

time to read

1 min

October 23, 2025

Listen

Translate

Share

-
+

Change font size