Try GOLD - Free
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
Dinamani Tenkasi
|January 05, 2026
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
அதேநேரம் பணம் குறித்துக் கவலைப்படாமல் என்ன விலை கொடுத்தாலும் அந்தப் பொருளை டஜன் கணக்கில் வாங்கலாம் என்று நினைக்கிறார்கள் அரசியல்வாதிகள். பணம் என்னய்யா பணம், வாங்கிப் போடு எல்லாவற்றையும் என்பவர்கள் ஆளும்கட்சியினர். இதுதான் நம் ஜனநாயகத்தில் பதுங்கியுள்ள பண நாயகம்.மக்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துவிட்டது என்று கவலைப்படுகிறார்கள் வர்த்தகர்கள். அரசின் புள்ளிவிவரங்களோ பொய்களுக்கு உண்மை முலாம் பூசி பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிறது.
சரி, மக்களிடம் புழங்காத பணம், மக்கள் வரியாகச் செலுத்தும் பணம், எங்குதான் போகிறது? 'நாங்கள் உங்கள் சேவகர்கள்' என்று கூறும் வெள்ளைச் சட்டைகளுக்குள் கருப்புப் பணமாக நிரம்பி வழிகிறது. அது ஆட்சி செய்வோரிடம் அடைக்கலம் புகுந்துவிட்டது என்பது உள்ளத்தைச் சுடும் உண்மை.
அந்தப் பணம் சில்லறைகளாகத் தேர்தல் காலத்தில் தலைகாட்டுகிறது. தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் ஒளித்து வைத்திருந்த கருப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சம் வெள்ளையாகத் தலைகாட்டுகிறது. அதுவும்கூட அதிகம் அல்ல. யானை தன் துதிக்கையால் எடுத்து வாயில் பிடித்துக்கொண்ட பெரிய சோற்று உருண்டையிலிருந்து சில பருக்கை கீழே விழுந்தால் அது பல எறும்புகளுக்கு உணவாகும். அதுபோலவே, வரிப் பணத்தை சாப்பிட்டவர்களிடமிருந்து கிடைக்கும் சில பருக்கைகளே தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுக்கப்படும் பணமும், பரிசுப் பொருள்களும்.
ஐந்தாண்டு பட்ஜெட் வருவாயில் இரண்டாண்டு பட்ஜெட் ஆட்சி செய்வோரின் கஜானாவுக்கு எந்தெந்த வழிகளிலோ போய் விடுகிறது. அது மாயப் பணம், நம் கண்களில் படுவதில்லை.
ஒரு குடும்பத்தின் செலவு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று குடும்பத் தலைவனோ, தலைவியோ நினைக்கிறார்கள். வரவுக்குள் செலவை அடக்க வேண்டும் என்பதற்காக சிக்கனமாக வாழ்கிறார்கள்.
மாநிலமே தங்கள் குடும்பம் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள் வரவுக்குள் செலவை அடக்குவதில்லை. அது முடியாதோ என்று கேட்டுவிட வேண்டாம். முடியும்; நிச்சயம் முடியும். வரவு முழுவதையும் வழியில் யாரும் மடக்கிவிடாமல் அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.
This story is from the January 05, 2026 edition of Dinamani Tenkasi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tenkasi
Dinamani Tenkasi
குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம்
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்
1 mins
January 14, 2026
Dinamani Tenkasi
ஹெச்சிஎல் நிகர லாபம் 11% சரிவு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்கின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 11.2 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
January 14, 2026
Dinamani Tenkasi
காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
1 min
January 14, 2026
Dinamani Tenkasi
இந்தியாவின் சநாதன தர்மம், கலாசாரத்தை எளிதில் அழிக்க முடியாது
அமித் ஷா உறுதி
1 min
January 14, 2026
Dinamani Tenkasi
அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!
அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!
2 mins
January 14, 2026
Dinamani Tenkasi
ராகுல் காந்தியுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார் சந்திப்பு
ராகுல் காந்தியுடன் அரசியல் எதுவும் பேசவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
January 14, 2026
Dinamani Tenkasi
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
January 13, 2026
Dinamani Tenkasi
பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு
மும்பை, ஜன.
1 min
January 13, 2026
Dinamani Tenkasi
அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
1 min
January 13, 2026
Dinamani Tenkasi
அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
1 min
January 13, 2026
Listen
Translate
Change font size
