Try GOLD - Free
விருப்பத்தை அடையவே வாழ்க்கை
Dinamani Pudukkottai
|December 28, 2025
“கண் பார்வை சவால் இருக்கத்தான் செய்கிறது.
அதை எதிர்கொள்வதில்தான் வாழ்க்கையின் ரகசியம் உள்ளது. விரும்புவதை அடைவதல்ல வாழ்க்கை; விரும்பியதற்காகத் தகுதிப்படுத்திக் கொள்வதுதான் உண்மையான வாழ்க்கை' என்று எனது ஆசிரியர் கூறுவார். அந்த வகையில் தகுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன்” என்கிறார் ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட குப்பத்தில் உள்ள திராவிட பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கு. பத்மநாபன்.பேச்சாளர், நிகழ்ச்சி நெறியாளர், சிறுகதையாசிரியர், இலக்கிய விமர்சகர், இலக்கிய ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் தன்மைகளோடு இயங்கி வரும் அவரிடம் பேசியபோது:
“ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட பரமக்குடியில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தேன். அண்ணன், அக்கா என இருவர். அண்ணனுக்கும் பார்வை தெரியாது என்பதோடு, மனவளர்ச்சியும் குறைவானவர். அப்பா ஓர் அரசுப் பணியாளர்.
சென்னை அடையாறு தூய லூயி காது கேளாதோர் - பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, சென்னை கிறித்துவக் கல்லூரியிலேயே முனைவர் பட்டம் வரை பெற்றேன். வரலாற்று அறிஞர் சா. பாலுசாமியின் வழிகாட்டுதலில், ஜெயகாந்தனையும் யூ.ஆர். அனந்தமூர்த்தியையும் ஒப்பிட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். ஆசிரியர் அருண்மொழித் தேவன், பேராசிரியர்கள் கு. அரசேந்திரன், நிர்மல் செல்வமணி உள்ளிட்டோர் வழிகாட்டியவர்கள்.
என் மனைவி ஜோதியும் பார்வையற்றவர்தான். இரண்டு குழந்தைகள் உண்டு. என்னை உருவாக்கிக் கரை சேர்க்க என் அம்மா ஒரு போராளியாகப் போராடினார். எனது சிறுவயதில் பெரிய ஸ்லேட்டில் சாக்பீஸில் ஓர் எழுத்தை எழுதி, அந்த எழுத்து மேலேயே திரும்பத் திரும்ப நூறு முறையாவது எழுத வைத்து, எனக்கு எழுத்தின் வடிவத்தைக் கற்றுக் கொடுத்தார். ஐந்தாம் வகுப்பில் தமிழோடு, ஆங்கிலத்தையும் கற்றேன். பாடங்களைக் காணொலியில் பதிவு செய்தும் படிப்பேன்.
இலக்கிய ஈடுபாடு:
சிறுவயதில் அம்மா வாசிப்பதைக் கேட்ட குழந்தை எப்படி வளரும்? அந்த வகையில் எனது அம்மாவே என் இலக்கிய ஈடுபாட்டுக்குக் காரணம்.
This story is from the December 28, 2025 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு
பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி
1 mins
May 18, 2026
Dinamani Pudukkottai
தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்
மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி
தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
இரு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞர்களும் உயிரிழந்தனர்.
1 mins
May 18, 2026
Dinamani Pudukkottai
கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!
சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
திரைப்படக் கல்வியின் அவசியம்
மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?
3 mins
May 18, 2026
Dinamani Pudukkottai
புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு
ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.
2 mins
May 18, 2026
Listen
Translate
Change font size
