Try GOLD - Free
தாய் மண்ணே வணக்கம்!
Dinamani Madurai
|December 09, 2025
சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திரத் தீயைப் பற்ற வைத்த மந்திரச் சொல் 'வந்தே மாதரம்'.
வங்க மொழி கவிஞரான பங்கிம் சந்திர சட்டர்ஜி 1875-இல் எழுதிய 'ஆனந்த மடம்' என்ற நாவலில், 'வந்தே மாதரம்' பாடல் இடம்பெற்றது.நம் தாய்த்திரு நாடான இந்தியாவை ஒரு தாயாக நினைத்து, அதன் இயற்கை வளங்கள், பழைமையான கலாசாரம், ஒற்றுமை உணர்வு ஆகியவற்றை வீரியமிக்க கவிதை வரிகளில் பங்கிம் சந்திர சட்டர்ஜி வடித்திருந்தார். அதனால், இந்தப் பாடலும், 'வந்தே மாதரம்' என்ற சொல்லும் இந்தியர்களின் மனதை ஆட்கொண்டது.
இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் கால் வைத்ததுமுதல் அவர்களை விரட்டுவதற்கான போராட்டம் என்பது நடந்து கொண்டேதான் இருந்தது. சுதந்திரப் போராட்டம் என்பது எவ்வித ஒருங்கிணைப்பும் இல்லாமல், தனித்தனியாக நடந்து வந்தது. ஒவ்வொரு பகுதியிலும் தங்களுக்குத் தெரிந்த வகையில், மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருந்தனர்.
ஆனால், 1875-இல் இயற்றப்பட்ட 'வந்தே மாதரம்' பாடல் மெல்ல மெல்ல மக்களைச் சென்றடைந்து, ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஒருங்கிணைத்தது. பல்வேறு இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தனது சுட்டெரிக்கும் கவிதைகளால், தமிழ் நாட்டில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய மகாகவி பாரதியார், 1905-ஆம் ஆண்டு 'வந்தே மாதரம்' பாடலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
வந்தே மாதரம் பாடலின் எழுச்சிதான் ஆங்கிலேயர்களை விரட்டியடித்து; சுதந்திர இந்தியாவை உருவாக்க ஓர் இயக்கத்தை உருவாக்க தூண்டுகோலாக அமைந்தது.
1885-இல் 'சுதந்திரம்' என்ற ஒற்றை நோக்கத்துக்காக 'இந்திய தேசிய காங்கிரஸ்' தொடங்கப்பட்டது. 1896-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், 'வந்தே மாதரம்' பாடலை உணர்ச்சிப் பெருக்குடன் பாடினார்.
This story is from the December 09, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinamani Madurai
உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 11, 2025
Dinamani Madurai
வீர சாவர்க்கர் விருதை ஏற்கப் போவதில்லை: சசி தரூர்
'வீர சாவர்க்கர் விருதை ஏற்கப் போவதில்லை; அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதுமில்லை' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinamani Madurai
2-ஆவது வெற்றி முனைப்பில் இந்தியா
டி20: தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்
1 min
December 11, 2025
Dinamani Madurai
இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.
1 mins
December 11, 2025
Dinamani Madurai
மகளிர் டி20: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் கமலினி, வைஷ்ணவி
இலங்கை மகளிர் அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இந்திய மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
December 10, 2025
Dinamani Madurai
புதுச்சேரியிலும் தவெக போட்டியிடும்: விஜய்
'புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயம் தொடக்கம்'
1 mins
December 10, 2025
Dinamani Madurai
உலகக் கடல் நீச்சல் இறுதிச் சுற்றில் சென்னை சிறுவனுக்கு வெண்கலம்
உலக கடல் நீச்சல் இறுதிச் சுற்றில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சிறுவன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
1 min
December 10, 2025
Dinamani Madurai
செல்வத்துப் பயனே ஈதல்!
'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி.
4 mins
December 10, 2025
Dinamani Madurai
முதல் டி20-யில் இந்தியா அபார வெற்றி
பாண்டியா, பௌலர்கள் அசத்தல்
1 min
December 10, 2025
Listen
Translate
Change font size
