Facebook Pixel பிகார் விவகாரம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பிகார் விவகாரம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி

Dinamani Madurai

|

August 05, 2025

மூன்றாவது வாரமாக முடங்கியது மக்களவை

புது தில்லி, ஆக. 4: பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மூன்றாவது வாரமாக திங்கள்கிழமையும் முடங்கியது.

முழக்கங்களை எழுப்பியபடியும், பதாகைகளை கையில் ஏந்தியபடியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி செய்ததால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதே நேரம், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி நிறுவனருமான சிபு சோரன் மறைவையொட்டி, அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின்னர் மாநிலங்களவையும் அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது முதல், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். ஆனால், 'தேர்தல் ஆணையம் போன்ற அரசமைப்புச் சட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கமுடியாது' என்று மத்திய அரசு மறுத்து வருகிறது. இதன் காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்

அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

சம்பத் ராயிடம் போலீஸ் விசாரணை; வாக்குமூலம் பதிவு

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

தலைமை நீதிபதிக்கு 'இண்டி' கூட்டணி கடிதம்: திமுக, ஆம் ஆத்மி கையொப்பம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு 'இண்டி' கூட்டணியின் 21 கட்சிகள் உள்பட 23 அரசியல் கட்சித் தலைவர்கள், ஒரு சுயேச்சை எம்.பி. ஆகியோர் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

கடையம் சத்திரம் பாரதி உயர்நிலைப் பள்ளி 'செல்லம்மாள் பாரதி' பள்ளியாக பெயர் மாற்றம்

தென்காசி மாவட்டம், கடையம் சத்திரம் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளியின் பெயரை கடையம் சத்திரம் செல்லம்மாள் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளி என்று மாற்றி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

ராஜ்நாத் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர்கள் வீரமரணம் விவகாரம்

time to read

1 mins

July 01, 2026

Dinamani Madurai

ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்

புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

time to read

1 min

July 01, 2026

Translate

Share

-
+

Change font size