Try GOLD - Free
பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியர் மாநாடு?
Dinamani Madurai
|May 17, 2025
ன்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியர் இளைஞர் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது.
பீ.ஜெபலின் ஜான்
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தமுறை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சுமார் 4 லட்சம் பேர் பங்கேற்ற மாநாடு பிரம்மாண்டமாக மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ராமதாஸ், அன்புமணி இடையிலான பனிப்போர், இந்த மாநாட்டு மேடையில் மறைமுகமாக வெளிச்சமானது. மேடைக்கு வந்த ராமதாஸ், தனது மகள் வழி பேரனும், பாமக இளைஞர் அணித் தலைவராக தன்னால் நியமிக்கப்பட்ட வருமான முகுந்தனின் தோளை தாங்கியபடி வந்தார். இருப்பினும் மேடையில் அன்புமணியின் குடும்பத்தினருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மாநாட்டில் நீண்டநேரம் உரையாற்றிய அன்புமணியின் பேச்சில் திமுக எதிர்ப்பு நேரடியாகவும், அதிமுகவுடன் கூட்டணி செல்வதற்கான அறிகுறிகள் மறைமுகமாகவும் தென்பட்டன. ஆனால், குறைந்த நேரத்தில் சுருக்கமாக டாக்டர் ராமதாஸ் பேசியது அன்புமணி ஆதரவு நிர்வாகிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும்படியாக இருந்தது.
மாறிமாறி கூட்டணி: கூட்டணி அரசியலுக்குள் கால்பதித்த பாமக 1998-இல் அதிமுக கூட்டணியிலும், 1999-இல் திமுக கூட்டணியிலும் மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. 2001 பேரவைத் தேர்தலில் அதிமுகவுடனும், 2004 மக்களவைத் தேர்தல் மற்றும் 2006 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி என மாறிமாறி கூட்டணி வைத்தாலும், தொடர்ந்து 10 ஆண்டுகளாக வெற்றி வளையத்தில் வலம்வந்தது.
This story is from the May 17, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.
1 min
May 13, 2026
Dinamani Madurai
நீட் தேர்வே ஒரு மோசடிதான்
நீட் தேர்வே ஒரு மோசடி தான் என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Madurai
சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்
சநாதனம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Madurai
அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
1 min
May 13, 2026
Dinamani Madurai
ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 13, 2026
Dinamani Madurai
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Madurai
தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
1 min
May 13, 2026
Dinamani Madurai
புதிய சிபிஐ இயக்குநர் தேர்வு: பிரதமர் தலைமையில் உயர் அதிகார குழு ஆலோசனை
புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான உயர் அதிகார குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
May 13, 2026
Dinamani Madurai
தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.
1 min
May 13, 2026
Dinamani Madurai
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: சாத்விக்/சிராக் இணை வெற்றி
தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி கண்டது.
1 min
May 13, 2026
Translate
Change font size
