Try GOLD - Free
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
Dinamani Kanyakumari
|September 01, 2025
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
பெரியார் ஈ.வெ.ரா. உடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, 1949-இல் திமுகவை தொடங்கினார். 1957-இல் முதல் தேர்தலைச் சந்தித்த திமுக, 15 இடங்களில் வெற்றி பெற்றது. 1962-இல் 50 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தபோது, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, சமுக்த சோஷலிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தே 168 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய சில மாதங்களிலேயே திண்டுகல் மக்களவைக்கான இடைத்தேர்தலில் முதல் வெற்றியைப் பெற்றார் என்றால் அதன் பின்னணியில் பெரும் வரலாறு இருக்கிறது. அவர் அதிமுகவை தொடங்குவதற்கு முன்பே அரசியலில் இருந்தார். 1953-இல் திமுகவில் இணைந்தார். 1967 பேரவைத் தேர்தலில், திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். எம்எல்சி, எம்எல்ஏ, திமுக பொருளாளர் என படிப்படியாக கட்சியில் உயர்ந்தார். அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 1972-இல் அதிமுகவை தொடங்கி முதல் தேர்தலிலேயே சாதனை படைத்தார்.
விஜய்க்கு இதுபோன்ற அரசியல் அனுபவம் இல்லை. திரைத்துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரது அனுபவமின்மையை அரசியல் நடவடிக்கைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. கட்சி தொடங்கிய இந்த ஒன்றரை ஆண்டுகளில் விக்கிரவாண்டி மாநாட்டையும், மதுரை மாநாட்டையும் தவிர அவர் வேறு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளைக்கூட திமுக முன்னெடுக்கவில்லை.
This story is from the September 01, 2025 edition of Dinamani Kanyakumari.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா தொடக்கம்
நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
புன்னைக்காயலில் செப்.6 இல் கவன ஈர்ப்பு போராட்டம்
புன்னைக்காயலில் ஊர் நிர்வாகக் குமிட்டியின் சார்பில் தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி வரும் செப்.6 ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.
2 mins
September 01, 2025
Dinamani Kanyakumari
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இருவர், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு
பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size