Try GOLD - Free
ஆபரேஷன் சிந்தூர் விடுக்கும் செய்தி!
Dinamani Erode & Ooty
|May 19, 2025
2014 முதல் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரதமர் மோடி ஏற்படுத்திய நல்லுறவு, இந்தியா குறித்து ஏற்படுத்திய புரிதல் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பெரிதும் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள்கூட புரிந்து கொண்டுள்ளன.
-
பல நூறு ஆண்டுகள் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு, 1947-இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், இவ்வளவு பெரிய நாட்டை, இயற்கை வளம், அறிவாற்றல், ஆன்ம பல முள்ள மக்களைக் கொண்ட நாட்டை, அப்படியே கொடுத்தால் உலக வல்லரசாகி விடுவார்கள் என பிரிட்டன் காலனிய அரசு நினைத்தது. அதனால்தான், முஸ்லிம்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற, 'முஸ்லிம் லீக்'கின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவை இரண்டாகப் பிளந்தனர். முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டது.
இதனால், பாகிஸ்தான் பகுதியில் இருந்து பல கோடி ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். பல லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால், ஆனந்தக் கண்ணீரோடு பெற வேண்டிய சுதந்திரத்தை, ரத்தக் கண்ணீரோடு பெற்றோம்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப்பிரதமராக, உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சர்தார் வல்லபபாய் படேலின் உறுதியான நடவடிக்கையால் இன்றைய இந்தியா கட்டமைக்கப்பட்டது. ஆனால், காஷ்மீரின் ஒரு பகுதியை ஆயுதமேந்திய கும்பலை அனுப்பி பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. அத்துடன் நிற்காமல் இந்தியாவின் பிரிக்க முடியாததொரு அங்கமான காஷ்மீர் பள்ளத்தாக்கையும் அபகரிக்கும் நோக்கத்தில் அன்று முதல் இன்று வரையில் பயங்கரவாத செயல்களை அங்கே பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.
இந்தியாவுடன் நேரடியாக மோதி, ஒரு நாளும் வெல்ல முடியாது என்பது பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் தெரியும். அதனால்தான், பல பயங்கரவாதக் குழுக்களுக்கு பணம், ஆயுதம், பயிற்சி கொடுத்து அவர்கள் வாயிலாக காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி, அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்து வருகிறது.
This story is from the May 19, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
சென்னை அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் தனி வார்டுகள்
அரசு மருத்துவமனைகளில் 71 படுக்கைகளுடன் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
October 12, 2025
Dinamani Erode & Ooty
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,996 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,996 கோடி டாலராக சரிந்துள்ளது.
1 min
October 12, 2025
Dinamani Erode & Ooty
கோலிவுட் ஸ்டூடியோ!
நட்சத்திரங்களின் ரீயூனியன்!
1 min
October 12, 2025

Dinamani Erode & Ooty
தமிழிலக்கியங்களில் வரிவிதிப்பு!
ஓர் அரசு இயங்கப் பொருள் வருவாய் மிக மிக இன்றியமையாததாகும். இதனை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் என்ற குறள் (385) சிறப்பாகக் கூறுகிறது.
1 mins
October 12, 2025
Dinamani Erode & Ooty
தேடிப்போகும் இனிப்பு!
“வீடுகளில், உணவுவிடுதிகளில், கல்யாண மண்டபங்களில் மிஞ்சிய உணவுகளை உரிய நேரத்தில் பசி, பட்டினியால் வாடுபவர்களுக்கு வழங்கினால் பசியைத் தணித்த புண்ணியமும் கிடைக்கும்; மிஞ்சிய உணவுகளால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதிலிருந்தும் காக்கலாம்” என்கிறார் சென்னை பல் மருத்துவர் இஸ்ஸா ஃபாத்திமா ஜேஸ்மின்.
1 min
October 12, 2025

Dinamani Erode & Ooty
உலகம் முழுவதும் தமிழ்க் கலைகளைப் பரப்ப அரசு துணை நிற்கும்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
2 mins
October 12, 2025

Dinamani Erode & Ooty
காலம் பெற உய்யப் போமின்
'காலம் பெற' என்பது விடியற்காலை எனப் பொருள் உணர்த்தும் வழக்குச் சொல்லாகும். 'காலம்பெறப் புறப்பட்டால் தான் அந்த வேலையை முடித்து வீடுதிரும்பலாம்' என்னும் கருத்தில் இச்சொல்லாடல் இடம் பெறுவதை இன்றும் காணலாம்.
2 mins
October 12, 2025

Dinamani Erode & Ooty
பெண் கல்வியின் அவசியம்
சிவன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் படம் 'பொம்மி அப்பா பேரு சிவன்'. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார் சிவன் சுப்ரமணி. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
1 min
October 12, 2025
Dinamani Erode & Ooty
இளம்பெண்களின் இசை பிரவாகம்!
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து 'பிரவாகம்' என்ற இசைக் குழுவைத் தொடங்கி, நாடு முழுவதும் இசை மழை பொழிந்து வருகிறார்கள். கர்நாடக சங்கீதம், மெல்லிசை, இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசை நிகழ்ச்சி என வெவ்வேறு வடிவங்களில் இந்தக் குழுவினர் வழங்கி வரும் புதுமையான நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. அவர்களைச் சந்தித்துப் பேசினோம்:
2 mins
October 12, 2025
Dinamani Erode & Ooty
பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!
காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:
2 mins
October 12, 2025
Translate
Change font size