Try GOLD - Free
பக்தியே நல்ல பகுத்தறிவு!
Dinamani Dindigul & Theni
|May 02, 2025
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்தச் சிறப்பைக் கொண்டு அந்த மொழியைப் பெயரிட்டு அழைப்பர். அந்த மரபில் தமிழ் மொழியின் சிறப்பாகப் பக்தியைச் சுட்டித் தமிழைப் பக்தி மொழி என்று போற்றுவார் தனிநாயகம் அடிகள்.
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்தச் சிறப்பைக் கொண்டு அந்த மொழியைப் பெயரிட்டு அழைப்பர். அந்த மரபில் தமிழ் மொழியின் சிறப்பாகப் பக்தியைச் சுட்டித் தமிழைப் பக்தி மொழி என்று போற்றுவார் தனிநாயகம் அடிகள். ஒன்றன்மீது கொள்ளுகிற ஆழ்ந்த பற்றே பக்தி ஆயிற்று. அதிலும் பற்றற்றான் ஆகிய பரமன் மீது கொள்ளும் பற்றுவிடும் பற்றுக் குத்தான் பக்தி என்று பெயர். இந்தப் பக்தி, நிறை அன்பின் வெளிப்பாடு.
புராணங்கள் வகுத்துள்ள யுகங்கள் நான்குள் கிருத யுகத்தில் ஞானத்தினாலும், திரேதா யுகத்தில் தானத்தினாலும், துவாபர யுகத்தில் யாகத்தினாலும் முத்தியடைந்தனர். ஆனால் நாம் இன்று வாழக்கூடிய கலி யுகத்தில் பக்தியினால் முத்தியடையலாம். ஞானமும் தானமும் யாகமும் எல்லாருக்கும் எளிதன்று. ஆனால், பக்தி என்பது எல்லாருக்கும் உரியது. அதிலும் பாமரர்களுக்கே அது இன்னும் உகந்தது. அதனால் தான் ஞானத்தினும் யாகத்தினும் தானத்தினும் மனங்கொளாத இறைவனைப் பக்தி வலையில் படுவோன் காண்க என்பார் மாணிக்கவாசகர்.
பதினெண் புராணங்களில் ஒன்றான பத்மபுராணம் இப்படிக் கூறுகிறது, மூன்று பெண்கள் துவாரகைக்குப் பயணம் சென்றனர். வழியில் நாரதர் அவர்களைச் சந்தித்தார். "நீங்கள் யார்?" என்று கேட்டார். அவர்களுள் ஒருத்தி, "நாங்கள் இருப்பது திராவிட தேசம்; என் பெயர் பக்தி; இவர்கள் ஞானமும், வைராக்கியமும். இவர்கள் என் பெண்கள். நான் தாய்" என்றாள். இதைக்கேட்ட நாரதர் "நீ தாயா? அவர்கள் உன் பெண்களா! உன்னைப் பார்த்தால் இளமையாக இருக்கிறதே! அவர்கள் உன்னில் மூத்த கிழவிகளாகத் தோன்றுகின்றனரே" என்றாராம்.
இதிலிருந்து அறியப்படும் உண்மை என்ன? 'பக்தி என்ற குணத்தின் பிறப்பிடம் திராவிடமாகிய தமிழகம் என்பதுதானே! ஆகவே, கனிந்த உள்ளமும், கசிவந்த சொல்லும் உடைய மொழியே பக்தி இலக்கியங்கள் தோன்ற இடந்தருவன என்பது துணியப்பெறும்' என்பார் மகாவித்வான் ச.தண்டபாணி தேசிகர். இத்தகு சீரிளமைத் திறம் வியந்துதானே நாம் தமிழன்னையைப் போற்றி வாழ்த்துகிறோம்.
தமிழில் என்ன இருக்கிறது? என்று ஒருவர் வேடிக்கையாகக் கேட்டபோது, பண்டிதமணியார் பின்வருமாறு பதிலளித்தார்: "இவ்வுலகில் மக்களுக்கு வேண்டியன இரண்டு. ஒன்று 'க'; மற்றொன்று 'கா'. அதாவது, 'க' என்றால் கடவுள், 'கா' என்றால் காதல். இந்த இரண்டுக்குள் உலகம் அடங்கும். இந்த இரண்டையும் தமிழ் போதிக்கிறது.
This story is from the May 02, 2025 edition of Dinamani Dindigul & Theni.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
2 mins
May 20, 2026
Dinamani Dindigul & Theni
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Dindigul & Theni
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Dindigul & Theni
இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்
அமெரிக்கா ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Dindigul & Theni
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Dindigul & Theni
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Dinamani Dindigul & Theni
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Dindigul & Theni
முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு
தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Dindigul & Theni
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Dindigul & Theni
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
May 19, 2026
Translate
Change font size

