Try GOLD - Free

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!

Dinamani Dharmapuri

|

October 25, 2025

உலக அளவில் ஒரு நாட்டின் பொருளாதார சக்கரச் சுழற்சியை இயங்கச் செய்வதிலும், நாட்டின் நிதிக் கட்டமைப்பின் வலிமையை நிர்ணயிப்பதிலும் அந்நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்புதான் முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான், ஒரு நாடு பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் போதும், கடன் சுமை அதிகரிக்கும் போதும், தங்கத்தை விற்று நெருக்கடியைச் சமாளித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அடிக்கல்லாக, பாதுகாப்பு கவசமாக தங்கம் விளங்குகிறது.

- பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!

அன்றைய துருக்கியின் பகுதியான லிடியாவில் குரோசஸ் மன்னரின் காலத்தில் (கி.மு.561) முதல்முதலில் தங்க நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, எல்லா சொத்துகளையும்விட உலகில் அதிகமாகப் பரிமாற்றம் செய்யப்படும் பொருளாகத் தங்கம் விளங்குகிறது. அமெரிக்காவின் பங்குச் சந்தைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான வர்த்தகம் தங்கத்துக்காக நடைபெறுகிறது. காரணம், தங்கம் வழங்கும் பாதுகாப்பை எந்த முதலீடும் வழங்குவது இல்லை.

லண்டனில் செயல்படும் உலக தங்க சபை (வேர்ல்ட் கோல்ட் கவுன்சில்) கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட பட்டியலின்படி, உலகில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் நாடுகளில், வழக்கம்போல் அமெரிக்கா தன் கையிருப்பில் 8,133 டன் தங்க கையிருப்புடன் முதலிடத்தில் உள்ளது. இத்தகைய பெரும் தங்க இருப்புதான், அதன் நாணயத்துக்கு (டாலர்) சர்வதேச சந்தையில் அதிக நம்பிக்கையை உருவாக்குகிறது.

இந்தப் பட்டியலில் அடுத்த ஏழு இடங்களில் முறையே ஜெர்மனி (3,351 டன்), இத்தாலி (2,451 டன்), பிரான்ஸ் (2,436 டன்), ரஷியா (2,333 டன்), சீனா (2,292 டன்), ஸ்விட்சர்லாந்து (1,040 டன்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா 880 டன் தங்கத்துடன் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த தங்க கையிருப்பே, இந்தியாவின் அந்நிய செலாவணியைப் பாதுகாக்க உதவுகிறது. உலக தங்க சபையின் தரவுகளின்படி, உலகின் மொத்த தங்க தேவையில், இந்தியா 26 சதவீத பங்கு வகிக்கிறது.

திடீரென ஒரு நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்தால், தங்கத்தை விற்று அந்த நெருக்கடியைச் சமாளிக்கலாம். சந்திரசேகர் இந்திய பிரதமராக 10.11.1990 முதல் 21.06.1991 வரை 223 நாள்கள் மட்டுமே பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலத்தில், 1991-ஆம் ஆண்டு மே மாதத்தில், நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடியை சமாளிக்கவும், வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களைச் செலுத்தவும், இறக்குமதியைக் கையாளவும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எஃப்) கடன் பெறவும். 47 டன் தங்கம் பாங்க் ஆஃப் இங்கிலாந்திடமும், மீதமுள்ள 20 டன் தங்கம் பாங்க் ஆஃப் ஸ்விட்சர்லாந்திலும் அடமானம் வைக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டது.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கு விற்பனையானது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள்

அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

time to read

2 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size