Facebook Pixel ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு

Dinamani Dharmapuri

|

August 31, 2025

கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு, ஆக. 30:

கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்முவில் மட்டும் மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 140 பேர் காயமடைந்துள்ள நிலையில், 32 பேர் இன்னும் மீட்கப்படவில்லை.

ரியாசி மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான பட்டேரில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் முழுவதுமாக மண்ணில் புதைந்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நசீர் அகமது (38), அவரது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தனர்.

இதேபோல், ராம்பன் மாவட்டத்தின் ராஜ்கர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மேகவெடிப்பால், இரண்டு சகோதரர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு பள்ளிக்கூடம் சேதமடைந்தது.

தலைவர்கள் இரங்கல்: ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் போன்ற பல தலைவர்கள் இந்தச் சம்பவங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மாற்றத்துக்கான நேரம்; பழிவாங்கலுக்கானதல்ல: பிரதமர் மோடி

மேற்கு வங்க மாநிலம் அச்சம்மிகுந்த சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவர் மு.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மம்தாவின் கோட்டையைத் தகர்த்த பாஜக!

200-க்கும் மேற்பட்ட இடங்களுடன் அமோகம்

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Translate

Share

-
+

Change font size