Try GOLD - Free
விண்வெளி ஆய்வில் இந்தியா!
Dinamani Dharmapuri
|August 23, 2025
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கிய இடம் இனிமேல் 'சிவசக்தி முனை' என்றழைக்கப்படும்; சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்த ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று, சந்திரயான்-3 விக்ரம் தரை இறங்கு வாகனம் (லேண்டர்), பிரக்யான் நிலவு ஊர்தி (ரோவர்) ஆகியவற்றை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு, நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என இந்தியா பெயர் பெற்றது.
இந்த சாதனையை அங்கீகரித்த பிரதமர் நரேந்திர மோடி சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை நினைவு கூரும் வகையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதியை இந்தியாவின் 'தேசிய விண்வெளி தினம்' என்று அறிவித்தார்.
இந்த நாள், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை முன்னணியில் நிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை அங்கீகரிக்கவும், அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தொழில் செய்ய ஊக்குவிக்கும் ஒருதளமாகவும், விண் வெளி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத் தையும், இந்தியாவின் பெருமையை விண் ணில் நிலைநாட்டிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் இரண்டாவது தேசிய விண்வெளி தினம் 23.08.2025 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
டாக்டர் விக்ரம் சாராபாயின் தலைமையி ல், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவை 23.02.1962 அன்று அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு நிறுவியதில் இருந்து இந்தியாவின் விண் வெளிப் பயணம் தொடங்கியது. இது 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, தேசிய வளர்ச்சிக்கு விண்வெளி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நோக் கத்துடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக பெயர் மாற்றம் பெற்றது.
1963-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள தும்பாவில் இருந்து அமெரிக்காவின் நைக் அப்பாச்சி சோதனை ராக்கெட்டை ஏவி யது இஸ்ரோ. அந்த கிராமம் 'தும்பா பூமத் திய ரேகை சமச்சீர் ராக்கெட் ஏவுதளம்' என்றழைக்கப்படும் தொடக்கம் பெற்றது. பின்னர், விக்ரம் சாராபாய் நினைவாக விக்ரம் சாராபாய் விண்வெளி மையமாக மாற்றம் பெற்றது.
This story is from the August 23, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
நாய்க்கடியால் மட்டுமன்றி சாலைகளில் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள்
நாய்க்கடிகளால் மட்டுமின்றி சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1 mins
January 08, 2026
Dinamani Dharmapuri
உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?
தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.
3 mins
January 08, 2026
Dinamani Dharmapuri
அதிமுக கூட்டணியில் பாமக
எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு
1 min
January 08, 2026
Dinamani Dharmapuri
டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை
டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
January 08, 2026
Dinamani Dharmapuri
மகாராஷ்டிரம்: உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக-காங்கிரஸ் கூட்டணி
மகாராஷ்டிரத்தில் 2 நகர்மன்றங்களில் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லீஸ் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
1 mins
January 08, 2026
Dinamani Dharmapuri
எண்ணமே வாழ்வு!
வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.
2 mins
January 08, 2026
Dinamani Dharmapuri
பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.
2 mins
January 08, 2026
Dinamani Dharmapuri
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 mins
January 07, 2026
Dinamani Dharmapuri
நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
1 min
January 07, 2026
Translate
Change font size
