Try GOLD - Free
மேலும் 34 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
Dinamani Dharmapuri
|June 17, 2025
நிவாரண முகாம்கள் அருகே தொடரும் துப்பாக்கிச்சூடு
-
டேய்ர் அல்-பாலா, ஜூன் 16: காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் 34 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது: காஸா முழுவதும் திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் ராஃபா நகரில் 33 பேரும் மத்திய காஸாவில் ஒருவரும் அடங்குவர் என்று அமைச்சகம் கூறியது.
அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிவாரணப் பொருள் விநியோக மையங்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்தின் நிவாரண மையங்களுக்கும் செல்லும் வழியில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
இதற்கு முன்னர் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களைப் போலவே இவற்றையும் இஸ்ரேல் ராணுவம்தான் நடத்தியதாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இருந்தாலும், இந்தத் தகவலை இஸ்ரேல் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுமதித்ததில் இருந்தே அந்தப் பொருள்களை வாங்க முகாம்களை நோக்கி வருவோர் மீது இஸ்ரேல் படையினர் தினமும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். ஆனால், ஒரே நாளில் இவ்வளவு அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
This story is from the June 17, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
பாமக பெயர், கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்தத் தடை கோரி ராமதாஸ் தரப்பு மனு
பாமகவின் பெயர், கட்சிக்கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி அல்லது வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த பொதுச் செயலர் முரளி சங்கர் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
1 min
January 20, 2026
Dinamani Dharmapuri
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஜன.
1 min
January 20, 2026
Dinamani Dharmapuri
வங்கதேசம்: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு வகுப்புவாதம் காரணமல்ல
இடைக்கால அரசு அறிக்கை
2 mins
January 20, 2026
Dinamani Dharmapuri
சமூக ஒற்றுமையின் விதைகள்!
இன்றைக்கு நகர்ப்புறங்களுக்குப் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
2 mins
January 20, 2026
Dinamani Dharmapuri
108 ஆம்புலன்ஸ் சேவை: ஓராண்டில் 18.07 லட்சம் பேர் பயன்
அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 18.07 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
1 min
January 19, 2026
Dinamani Dharmapuri
தொழிலாளர் நலன் காப்போம்!
உழைப்பு மனித நாகரிகத்தின் அடித்தளம்.
3 mins
January 19, 2026
Dinamani Dharmapuri
சிதம்பரத்தில் தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம்
தை அமாவாசையையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
1 min
January 19, 2026
Dinamani Dharmapuri
மிட்செல், கிளென் அதிரடி: தொடரைக் கைப்பற்றியது நியூஸி.
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது நியூஸிலாந்து.
2 mins
January 19, 2026
Dinamani Dharmapuri
மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
January 19, 2026
Dinamani Dharmapuri
சபலென்கா, அல்கராஸ் வெற்றித் தொடக்கம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா, எம்மா ரடுகானு, எலினா ஸ்விட்டோலினா, ஆடவர் பிரிவில் முன்னணி வீரர்கள் கார்லோஸ் அல்கராஸ், ஸ்வெரேவ் வெற்றியுடன் தொடங்கினர்.
1 min
January 19, 2026
Translate
Change font size

