Facebook Pixel யாழ் இனிது! | Dinamani Cuddalore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

யாழ் இனிது!

Dinamani Cuddalore

|

March 16, 2025

இலக்கிய குவியலுக்கு இடையிலே யாழின் நாண்களைச் சரியாக மீட்டு, 2,500 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ் இசைக்கருவியை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த இருபத்து எட்டு வயதான இளைஞர் தருண்சேகர்.

- -ந. முத்துமணி

இவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது 'உரு இன்ஸ்ட்ருமென்ட்ஸ்' என்ற நிறுவனம் வாயிலாக, அந்தக் கருவியைத் தயாரித்து வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

எனது சொந்த ஊரான மதுரையில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, 'ஹவாய் கிடார்' இசைக்கருவியின் மீது ஈர்ப்பு வந்தது. அந்தக் கருவி இந்தியாவில் எங்கும் கிடைக்கவில்லை. 'யூடியூப்' வாயிலாகச் சொந்தமாக வடிவமைத்தேன். சொந்தமான இசைக்கருவியை வடிவமைத்து, அதில் இருந்து புறப்படும் ஒலியைக் கேட்டபோது உற்சாகம் துள்ளியது.

வடிவமைப்பை பயில, ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் கட்டடக் கலையை கற்றேன். கோடை விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும்போதெல்லாம், பஞ்சோ, உக்குலேலே போன்ற நாண்கருவிகளைச் சொந்தமாக உருவாக்கினேன்.

மாணவர் பயிற்சி முகாமுக்காக, புதுச்சேரி ஆரோவில் சென்றபோது, கிடார் போன்ற கம்பி இசைக்கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 'எரிஸா நியோகி' என்பவரை சந்தித்தேன்.

நான் வடிவமைத்த இசைக்கருவிகளை அவரிடம் காண்பித்தபோது, அதைப் பாராட்டிய நியோகி ஆறு மாதங்கள் இசைக்கருவி வடிவமைப்பு தொடர்பாக பயிற்சியை எனக்கு அளித்தார். இது எனக்குள் புத்துணர்வை ஏற்படுத்தியது.

படிப்பை முடித்தவுடன் இசைக்கருவிகளை உருவாக்குவதற்காகவே வாழ்நாளை ஒப்படைக்க முடிவு செய்தேன். இந்திய இசைக் கருவிகளை உலகத் தரத்தில் உருவாக்க முடிவு செய்து, 2019-இல் 'உரு இன்ஸ்ட்ருமென்ட்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீணையை மறு உருவாக்கம் செய்ய திட்டமிட்டிருந்தேன். கீழடி ஆய்வில் ஈடுபட்டு, அதன் கட்டடக்கலையை ஆவணப்படுத்தி வந்த எனது நண்பர் சிவா, பழந்தமிழர் இசைக்கருவியான 'யாழ்' பற்றித் தெரிவித்தபோது, அதை ஆராயத் தொடங்கினேன். அன்றைய சந்தையில் இசைக்கக் கூடிய 'யாழ்' கருவி இல்லை என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தேன்.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Cuddalore

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!

சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

time to read

3 mins

May 15, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Cuddalore

பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Cuddalore

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Cuddalore

மாற்று அரசியலைக் கொண்டுவருவதில் தவெக உறுதி

உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்

time to read

1 mins

May 14, 2026

Dinamani Cuddalore

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Cuddalore

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Cuddalore

முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசு பதவி ரத்து

தமிழக முதல்வர் விஜய் யின் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட உத் தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Cuddalore

4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!

நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி

time to read

1 min

May 14, 2026

Translate

Share

-
+

Change font size