Facebook Pixel என்று முடியும் இந்த 'ரீல்ஸ்' மோகம்? | Dinamani Coimbatore - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

என்று முடியும் இந்த 'ரீல்ஸ்' மோகம்?

Dinamani Coimbatore

|

July 17, 2025

இருபொருள் தொனிக்கும் ஆபாச உரையாடல்களும், பொதுவெளியில் பேசத் தயங்கும், பேசவே முடியாத அருவெறுக்கத்தக்க சொல்லாடல்களைக் கூச்சமின்றி அப்பட்டமாக அப்படியே பதிவிடும் அநாகரிகமும் விநாடிக்கு விநாடி பெருகி வருகின்றன.

- கிருங்கை சேதுபதி

இரவு, பகல் பாராமல், ஏன் இரவு பகல் வேறுபாடுகள்கூடத் தெரியாமல் கைப்பேசிக்குள் கண் புதைத்து வாழ்வோர் பெருகிய காலமாக மாறி வருகிறது. அதிலும், அண்மைக்காலமாக, சிறியோர் முதல் பெரியோர் வரை, 'ரீல்ஸ்' மோகத்திற்கு உள்ளாகி, அடிமையாகி வருகிறார்கள்.

தன்னைத் தலைவனாக முன்னிறுத்திக் கொண்டு 'தற்படம்' ஆகிய நிலைப்படத்தை (ஸ்டில்) எடுத்து வெளியிட்ட காலம்போய், தன்னையே தலைமைப் பாத்திரமாகக் கொண்டு, தான் செய்யும் அரிய சாதனையை (?) உலகறியச் செய்யும் தொடர்படமாக, கைப்பேசி வழி எடுத்து, அதன்வழி கிடைக்கும் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வெளியிடும் படக்காட்சியே 'ரீல்ஸ்'.

அது பரவலாகிப் பலரும் பார்க்கப்படுவதை, 'வைரலாகிறது' என்கிறார்கள். பார்ப்பதும் ரசிப்பதும், மீள் பதிவிடுவதும் ஆகி, 'வைரஸ்' நோய்போல் பரவி வரும் இப் பற்றுநோய், புற்றுநோய்போல் பலரைத் தன்வயப்படுத்தி வருகிறது.

ஆண், பெண் பேதமில்லாமல், வயது வேறுபாடின்றி, எதையும் எப்போதும் பதிவாக்குவதும், உடன் பதிவிடுவதும், அது எத்தனை பேரால் பார்க்கப்படுகிறது, விருப்பம் (லைக்ஸ்) தெரிவிக்கப்படுகிறது, என்னென்ன பதிலிகள் (கமென்ட்ஸ்) வருகின்றன என்று பார்ப்பதிலுமே பலரது உயிரான பொழுதுகள் விரயமாகின்றன.

அதைவிடவும், 'ரீல்ஸை' படமாக்கிய படியே நேரடியாக (லைவ் ஆக) பதிவிடுகிறவர்கள் சாகசம் என்கிற பெயரில் பைத்தியக்காரத்தனமான செயல்களில் வெறித்தனமாக ஈடுபட்டு, தனக்கும் பிறர்க்கும் கேடு விளைவிக்கிறார்கள்; உயிரிழக்கும் ஆபத்துக்கும் உள்ளாகிறார்கள்.

நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் திரைக்காட்சியில் இடம்பெறுவதுபோல் சாகசம் நிகழ்த்தி நேரடிப் படமாக்கி ஒளிபரப்ப விழைவதையும், அவ்வாறு படமாக்கிவரும்போதே விபத்தில் சிக்கி உயிரிழப்பதையும் காண முடிகிறது.

MORE STORIES FROM Dinamani Coimbatore

Dinamani Coimbatore

நோயாளியின் மூளைச் சாவு அறிவிப்பு தொடர்பான மனு: பரிந்துரைகளை ஆராய எய்ம்ஸ் குழு

நோயாளி மூளைச் சாவு அடைந்ததை அறிவிப்பது தொடர்பாக மனுதாரர் முன்மொழிந்த பரிந்துரையை ஆராய குழு அமைக்க எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டுக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ரைபகினா, கௌஃப் அதிர்ச்சித் தோல்வி; பொடாபோவா, சின்னர் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான எலனா ரைபகினா, கோகோ கௌஃப் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

April 29, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஐபிஎல் பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Coimbatore

வாக்கு எண்ணும் மையத்தில் 'ஜனநாயகன்' படத்தை பார்த்த ஒப்பந்த ஊழியர் கைது

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், 'ஜனநாயகன்' திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து, மடிக்கணினியில் பார்த்ததாக ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

April 29, 2026

Dinamani Coimbatore

மிகக் கடுமையான பரிசோதனை கட்டுப்பாடுகளைக் கடந்து வந்தேன்

செபாஸ்டியன் சாவே

time to read

1 min

April 29, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

வெளியேறியது இந்திய மகளிர் அணி

தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 0-5 என சீனாவிடம் தோல்வி கண்டு, போட்டியிலிருந்து வெளியேறியது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Coimbatore

உள்ளம் அளந்திடும் உலகளந்தான் கோல்!

தேர்தல் வாக்குறுதி பலூன்கள் பரபரப்பாய் தமிழக வானில் மிதந்து கொண்டிருந்த சூழலில், என் நெருங்கிய அயலகத் தமிழாசிரியர் ஒருவர் அவசரமாய் அழைத்தார்.

time to read

3 mins

April 29, 2026

Dinamani Coimbatore

கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்வு

கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

time to read

1 min

April 28, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

காலிறுதியில் இந்திய ஆடவர் அணி

டென்மார்க்கில் நடைபெறும் தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், ஆடவர் அணிகள் பிரிவில் இந்தியா 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறியது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சபலென்கா, லெய்லா முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் களிமண் கள டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில், நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, இளம் வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

April 28, 2026

Translate

Share

-
+

Change font size