Intentar ORO - Gratis
என்று முடியும் இந்த 'ரீல்ஸ்' மோகம்?
Dinamani Coimbatore
|July 17, 2025
இருபொருள் தொனிக்கும் ஆபாச உரையாடல்களும், பொதுவெளியில் பேசத் தயங்கும், பேசவே முடியாத அருவெறுக்கத்தக்க சொல்லாடல்களைக் கூச்சமின்றி அப்பட்டமாக அப்படியே பதிவிடும் அநாகரிகமும் விநாடிக்கு விநாடி பெருகி வருகின்றன.
இரவு, பகல் பாராமல், ஏன் இரவு பகல் வேறுபாடுகள்கூடத் தெரியாமல் கைப்பேசிக்குள் கண் புதைத்து வாழ்வோர் பெருகிய காலமாக மாறி வருகிறது. அதிலும், அண்மைக்காலமாக, சிறியோர் முதல் பெரியோர் வரை, 'ரீல்ஸ்' மோகத்திற்கு உள்ளாகி, அடிமையாகி வருகிறார்கள்.
தன்னைத் தலைவனாக முன்னிறுத்திக் கொண்டு 'தற்படம்' ஆகிய நிலைப்படத்தை (ஸ்டில்) எடுத்து வெளியிட்ட காலம்போய், தன்னையே தலைமைப் பாத்திரமாகக் கொண்டு, தான் செய்யும் அரிய சாதனையை (?) உலகறியச் செய்யும் தொடர்படமாக, கைப்பேசி வழி எடுத்து, அதன்வழி கிடைக்கும் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வெளியிடும் படக்காட்சியே 'ரீல்ஸ்'.
அது பரவலாகிப் பலரும் பார்க்கப்படுவதை, 'வைரலாகிறது' என்கிறார்கள். பார்ப்பதும் ரசிப்பதும், மீள் பதிவிடுவதும் ஆகி, 'வைரஸ்' நோய்போல் பரவி வரும் இப் பற்றுநோய், புற்றுநோய்போல் பலரைத் தன்வயப்படுத்தி வருகிறது.
ஆண், பெண் பேதமில்லாமல், வயது வேறுபாடின்றி, எதையும் எப்போதும் பதிவாக்குவதும், உடன் பதிவிடுவதும், அது எத்தனை பேரால் பார்க்கப்படுகிறது, விருப்பம் (லைக்ஸ்) தெரிவிக்கப்படுகிறது, என்னென்ன பதிலிகள் (கமென்ட்ஸ்) வருகின்றன என்று பார்ப்பதிலுமே பலரது உயிரான பொழுதுகள் விரயமாகின்றன.
அதைவிடவும், 'ரீல்ஸை' படமாக்கிய படியே நேரடியாக (லைவ் ஆக) பதிவிடுகிறவர்கள் சாகசம் என்கிற பெயரில் பைத்தியக்காரத்தனமான செயல்களில் வெறித்தனமாக ஈடுபட்டு, தனக்கும் பிறர்க்கும் கேடு விளைவிக்கிறார்கள்; உயிரிழக்கும் ஆபத்துக்கும் உள்ளாகிறார்கள்.
நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் திரைக்காட்சியில் இடம்பெறுவதுபோல் சாகசம் நிகழ்த்தி நேரடிப் படமாக்கி ஒளிபரப்ப விழைவதையும், அவ்வாறு படமாக்கிவரும்போதே விபத்தில் சிக்கி உயிரிழப்பதையும் காண முடிகிறது.
Esta historia es de la edición July 17, 2025 de Dinamani Coimbatore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Coimbatore
Dinamani Coimbatore
தாமதமாகும் 'ஜனநாயகன்' - பின்புலம் என்ன?
மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனவரி 9-ஆம் தேதி வெளி வரவேண்டிய நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' தணிக்கைக் குழுவினரின் தாமதத்தால் வெளிவராமல் போனது பரவலான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.
3 mins
January 12, 2026
Dinamani Coimbatore
கோலி அதிரடியில் இந்தியா வெற்றி
வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
1 min
January 12, 2026
Dinamani Coimbatore
எழுந்திடு, விழித்திடு, உழைத்திடு...
இன்று பாரதத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷாரை விரட்டியது 'வெள்ளையனே வெளியேறு' என்ற 'குயிட் இந்தியா' இயக்கம்.
2 mins
January 12, 2026
Dinamani Coimbatore
இளைஞர்களின் துறவி!
ஸ்ரீ அரவிந்தர் விவேகானந்தரைத் தம் குரு எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
3 mins
January 12, 2026
Dinamani Coimbatore
ஸ்விட்டோலினா சாம்பியன்
ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைனின் எலனா ஸ்விட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
January 12, 2026
Dinamani Coimbatore
சபலென்கா, மெத்வதேவ் சாம்பியன்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் அரினா சபலென்காவும், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவும் பட்டம் வென்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Coimbatore
தேசிய கூடைப்பந்து: ரயில்வேக்கு இரட்டை பட்டம்
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே இரட்டை சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
January 12, 2026
Dinamani Coimbatore
கூட்டணி குறித்து எந்தக் கட்சியும் பேசவில்லை
கூட்டணி குறித்து எந்த அரசியல் கட்சியும் தற்போது வரை தன்னிடம் பேச்சு நடத்தவில்லை என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
January 12, 2026
Dinamani Coimbatore
அயன்மேன் டிரையத்லான்: இந்திய அணியினர் சிறப்பிடம்
சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் தூர டிரையத்லான் நிகழ்வான, 'அயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை' போட்டியில் இந்திய அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Coimbatore
சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
1 min
January 12, 2026
Translate
Change font size
