Try GOLD - Free
உலகப் பெருந்தமிழர் நல்லகண்ணு!
Dinamani Chennai
|January 04, 2025
இந்தியாவின் வடக்கே உள்ள கான்பூரில், 26 டிசம்பர் 1925-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. அதே நாளில் இந்தியாவின் தென்கோடியான தமிழ்நாட்டில் திருவைகுண்டம் அருகே உள்ள பெரும்பத்து என்னும் கிராமத்தில் தோழர் இரா. நல்லகண்ணு பிறந்தார்.
-
தமிழரான சிங்காரவேலர் தலைமையில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அதன் நூற்றாண்டு விழா நடைபெறும் இவ்வாண்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளராகத் தமிழரான தோழர் டி. இராசா திகழ்வதும், தமிழ்நாட்டில் அக்கட்சியை வளர்த்தெடுத்த தியாகச் செம்மல்களில் ஒருவரான இரா. நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறுவதும் தற்செயலானது அல்ல; அல்லவே அல்ல; வரலாறு பதித்த என்றும் அழியாத முத்திரை தடயங்களாகும்.
பள்ளிப் பருவத்தில் பாரதியின் பாடல்களில் உள்ளத்தைப் பறிகொடுத்த இரா. நல்லகண்ணு, இளமைப் பருவத்தில் வ.உ. சிதம்பரனார், சத்தியமூர்த்தி மற்றும் பல தேசியத் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும், பகத் சிங் போன்ற மாபெரும் புரட்சி வீரர்களின் வரலாறுகளைப் படித்தும் தனது நாட்டுப் பற்றை வளர்த்துக் கொண்டார். நாளுக்குநாள் அவரது உள்ளத்தில் தேசப் பற்று தீப்பற்றி எரிந்தது. இதன் விளைவாக, கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு 1946-ஆம் ஆண்டில் மக்களுக்காகத் தொண்டாற்றும் மனிதநேய வாழ்வைத் தேர்ந்தெடுத்தார்.
1947-ஆம் ஆண்டு மே தின விழாவிற்காக நான்குநேரி வட்டாரத்தில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி வெற்றிகரமாக விழா நடத்தியதைக் கண்டு வெகுண்டெழுந்த நில உடைமையாளர்கள் ஏவிய குண்டர்களால் தாக்கப்பட்டு முதன்முதலாக ரத்தம் சிந்தி தியாகத் தழும்பை ஏற்றார்.
This story is from the January 04, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
அரசமைப்பின் புனிதத்தன்மையை நிலைநிறுத்தும் வழக்குரைஞர் சங்கம் - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதிலும், அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மையை நிலைநிறுத்துவதிலும் வழக்குரைஞர் சங்கம் மிக முக்கிய பங்கை வகிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.
1 min
November 27, 2025
Dinamani Chennai
அரிய புவி காந்தங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.7,280 கோடியில் திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அரிய புவி காந்தங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.7,280 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
1 mins
November 27, 2025
Dinamani Chennai
மெரீனாவில் சாலையோர வியாபாரம்: வனத் துறை முதன்மைச் செயலர், மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவு
மெரீனா கடற்கரையில் சாலையோர வியாபாரத்தை நெறிப்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத விவகாரத்தில் வரும் டிச.10-ஆம் தேதி சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
November 27, 2025
Dinamani Chennai
நவ. 29-இல் செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை
தமிழகத்தில் நவ.29-ஆம் தேதி (சனிக்கிழமை) திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிபலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்குச் 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புதன்கிழமை (நவ. 26) காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
1 min
November 27, 2025
Dinamani Chennai
ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். நீதி வணிகமயம் ஆகக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டார்.
1 min
November 27, 2025
Dinamani Chennai
இந்தியாவுக்கு இதுவரை இல்லாத தோல்வி - தென்னாப்பிரிக்காவுக்கு வரலாற்று வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை படுதோல்வியைச் சந்தித்தது.
1 mins
November 27, 2025
Dinamani Chennai
சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!
கடந்த நவ.24-ஆம் தேதி அனைத்து சமூக ஊடங்களிலும் பரவலாகப் பேசப்பட்டது மிகப் பெரிய ஆளுமையின் மறைவுச் செய்தி.
2 mins
November 27, 2025
Dinamani Chennai
விண்ணவெளித் துறையில் தனியார்மயம் பாதிப்பை ஏற்படுத்தாது
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் விண்வெளித் துறையில் தனியார்மயம் என்பது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min
November 27, 2025
Dinamani Chennai
புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு: அனுமதி கோரி தவெகவினர் மனு
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் வரும் டிச.5-ஆம் தேதி மக்கள் சந்திப்பு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு அனுமதி கோரி காவல் துறை தலைவரிடம் அந்தக் கட்சியினர் புதன்கிழமை மனு அளித்தனர்.தமிழகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்காத நிலையில், புதுச்சேரியில் தவெக தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளார்.
1 min
November 27, 2025
Dinamani Chennai
ரயில்களில் ‘ஹலால்’ இறைச்சி உணவு மட்டுமே வழங்கப்படுவதாக புகார் - மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
ரயில் பயணிகளுக்கான அசைவ உணவில் 'ஹலால்' இறைச்சி (இஸ்லாமிய வழிமுறைகளின்படி வெட்டப்பட்டவை) உணவுகள் மட்டுமே வழங்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரில் ரயில்வே அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
November 27, 2025
Translate
Change font size

