ஏழைத் தமிழர்களுக்கு இந்தியா இரண்டாம் தாய் நாடு...
DINACHEITHI - NELLAI
|May 23, 2025
தமிழர்கள் என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது இந்திய ஒன்றிய அரசின் வழக்கமாக உள்ளது. அதே போன்றதொரு மனப்பான்மை நீதியின் குரலாக ஒலித்திருப்பது உலகத் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் உலுக்கியுள்ளது.
-
இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறி இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 2018ம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது அவரது தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மேலும், தண்டனைக் காலம் முடிந்ததும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தால் உத்தரவிட்டப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், "அகதிகள் முகாமிலேயே 3 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். என்னுடைய மனைவியும், குழந்தைகளும் இங்கேயே தங்கி உள்ளனர். தாய் நாடான இலங்கையில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே, எனது தண்டனையை ரத்து செய்வதோடு, இந்தியாவிலேயே தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஏற்கெனவே இங்கு 140 கோடி மக்களுடன் போராடி வருகிறோம். உலக நாடுகள் பலவற்றிலிருந்து இங்கு பலர் வந்து அகதியாகத் தங்கி வருகின்றனர். அனைவரும் வந்து தங்குவதற்கு இது தர்ம சத்திரம் கிடையாது.
உலக அகதிகள் அனைவரும் இங்கு வந்து தங்கலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளதா ? அனைத்து வெளி நாட்டினரையும் இங்கு தங்க வைக்க முடியாது. இங்கு அகதியாக வந்து தங்கியிருக்க உங்களுக்கு உரிமை கிடையாது. தண்டனைக் காலம் முடிந்ததும் இங்கு தங்கியிருக்க முடியாது. நீங்கள் வேறு நாட்டுக்குச் செல்லலாம்" என்று காட்டமாக குறிப்பிட்டிருந்தனர்.
This story is from the May 23, 2025 edition of DINACHEITHI - NELLAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்
அதிகாரிகள் தகவல்
1 min
January 03, 2026
DINACHEITHI - NELLAI
மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
3 mins
January 03, 2026
DINACHEITHI - NELLAI
வங்க கடலில் 6-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
1 min
January 03, 2026
DINACHEITHI - NELLAI
சி, டி. பிரிவு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ. 3 ஆயிரம்
தமிழக அரசு அறிவிப்பு
1 min
January 02, 2026
DINACHEITHI - NELLAI
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.
1 min
January 02, 2026
DINACHEITHI - NELLAI
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை: டிரோன்களுக்கு தடை
துணை ஜனாதிபதியாக சி. பி. ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
1 min
January 02, 2026
DINACHEITHI - NELLAI
சிகரெட், பீடி விலை உயர்வு: புதிய வரி விதிப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min
January 02, 2026
DINACHEITHI - NELLAI
காய்ச்சல், வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தும் ‘நிம்சுலைடு’ மருந்துக்கு மத்திய அரசு தடை
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது.
1 min
January 02, 2026
DINACHEITHI - NELLAI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - NELLAI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
Translate
Change font size
