Try GOLD - Free

மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு கருத்துக் கணிப்பு சொல்லுவது என்ன?

DINACHEITHI - DHARMAPURI

|

June 22, 2025

சென்னை ஜூன் 22சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்துகணிப்புகளை நடத்தி உள்ளது.

மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு கருத்துக் கணிப்பு சொல்லுவது என்ன?

234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி முதல் கடந்த 17 -ந்தேதி வரை 150 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 70,922 பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகளை இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு :-

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக 77.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்று 73.30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக 67.99 சதவீதம் பேரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரான அண்ணாமலை முதல்வராக 64.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் முதலமைச்சராக 60.58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த படியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் முதல்வராக 30.80 சதவீதம் பேரும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வராக 19.97 சதவீதம் பேரும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு 17.38 சதவீதம் பேரும், டி.டி.வி. தினகரனுக்கு 16.29 சதவீதம் பேரும், திருமாவளவனுக்கு 14.71 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

வருகிற தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள அரசியல் கட்சி எது என்கிற கேள்விக்கு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று 80.74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்? என்கிற கேள்விக்கு அண்ணாமலை முதலிடத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 2-வது இடத்தில் விஜய், 3-வது இடத்தில் உதயநிதி, 4-வது இடத்தில் சீமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 74,000-ஆக உயர்வு

தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் உள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் கட்சிகள் மட்டும் இன்றிதேர்தல் ஆணையமும் தீவிரம் காட்டி வருகிறது.

time to read

1 min

September 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

September 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் 108-வது பிறந்தநாளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

September 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம்:முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :-

time to read

1 min

September 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா : சிலைக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று 15.9.2025 அன்றுகாலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்துமலர் தூவிமரியாதை செலுத்துகிறார்கள்.

time to read

1 mins

September 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது “ என்று, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

time to read

1 mins

September 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் 2002 மற்றும் 2004-க்கு இடையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

time to read

1 min

September 11, 2025

DINACHEITHI - DHARMAPURI

300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி தோல்வியை தழுவினார்

துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. இதில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். இந்த தேர்தலில் 452 வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ( தேசிய ஜனநாயக கூட்டணி) வெற்றி பெற்றார். 300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி ( இந்தியா கூட்டணி) தோல்வியை தழுவினார்

time to read

1 mins

September 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

452 வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி தோல்வியை தழுவினார்

time to read

1 mins

September 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

இசைக் கலைஞர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

திருக்குறளைக் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம் படைத்துள்ள இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரை பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:-

time to read

1 min

September 08, 2025

Translate

Share

-
+

Change font size