Intentar ORO - Gratis
மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு கருத்துக் கணிப்பு சொல்லுவது என்ன?
DINACHEITHI - DHARMAPURI
|June 22, 2025
சென்னை ஜூன் 22சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்துகணிப்புகளை நடத்தி உள்ளது.
-
234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி முதல் கடந்த 17 -ந்தேதி வரை 150 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 70,922 பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகளை இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு :-
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக 77.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்று 73.30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக 67.99 சதவீதம் பேரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரான அண்ணாமலை முதல்வராக 64.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் முதலமைச்சராக 60.58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு அடுத்த படியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் முதல்வராக 30.80 சதவீதம் பேரும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வராக 19.97 சதவீதம் பேரும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு 17.38 சதவீதம் பேரும், டி.டி.வி. தினகரனுக்கு 16.29 சதவீதம் பேரும், திருமாவளவனுக்கு 14.71 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
வருகிற தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள அரசியல் கட்சி எது என்கிற கேள்விக்கு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று 80.74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்? என்கிற கேள்விக்கு அண்ணாமலை முதலிடத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 2-வது இடத்தில் விஜய், 3-வது இடத்தில் உதயநிதி, 4-வது இடத்தில் சீமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Esta historia es de la edición June 22, 2025 de DINACHEITHI - DHARMAPURI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு
29, 30-ந் தேதி நடக்கிறது
1 min
June 27, 2026
DINACHEITHI - DHARMAPURI
தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.
1 min
June 27, 2026
DINACHEITHI - DHARMAPURI
உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை , சென்னையில், உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.
1 min
June 27, 2026
DINACHEITHI - DHARMAPURI
வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.
1 min
June 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
எல்நினோ அபாயம்: தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும்?
எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
சட்டசபையில் முதல்வர் அமைச்சர் விஜய் உறுதி
\"மக்கள் பணத்தை தொட மாட்டோம்., ஊழல் செய்தோரை விட மாட்டோம்., சட்டத்தின் முன் நிறுத்துவோம் \"என சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் உறுதியுடன் கூறினார்.
1 mins
June 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:
1 min
June 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
60 ஆண்டுகால உறவு முறிந்தது
தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.
1 min
June 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
1 min
June 21, 2026
Translate
Change font size
