Facebook Pixel இந்தியாவின் 5வது பணக்கார தயாரிப்பாளர்...பாலிவுட்டின் காட்ஃபாதர்...திருமணமாகாமல் இரு குழந்தைகளின் தந்தை! | Kungumam - entertainment - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

இந்தியாவின் 5வது பணக்கார தயாரிப்பாளர்...பாலிவுட்டின் காட்ஃபாதர்...திருமணமாகாமல் இரு குழந்தைகளின் தந்தை!

Kungumam

|

09-02-2024

பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், ரியாலிட்டி ஷோ நடுவராகவும் படுபிஸியாக இயங்கிக் கொண்டிருப்பவர் கரண் ஜோஹர்.

- பேராச்சி கண்ணன்

இந்தியாவின் 5வது பணக்கார தயாரிப்பாளர்...பாலிவுட்டின் காட்ஃபாதர்...திருமணமாகாமல் இரு குழந்தைகளின் தந்தை!

1998ல் அவரின் இயக்கத்தில் முதல்படமாக வெளிவந்து பலரின் மனதைக் கிறங்கடித்த ‘குச் குச் ஹோதா ஹை’ இப்போதும் கரணை பேச வைத்துக் கொண்டிருக்கிறது.
பின்னர், ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதுமான ரசிகர்களைக் கவர்ந்தார் கரண். கூடவே படங்கள் தயாரிப்பதும், இயக்குவதும், பிசினஸ் செய்வதும், அதற்கான முதலீடு போடுவதும் எனப் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டார்.  

இப்போது சினிமா இயக்குநராகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் கரண் ஜோஹர். இத்தனை ஆண்டுகளில் அவர் சுமார் 50 படங்களைத் தயாரித்துள்ளார். இதில் பத்து படங்கள் அவர் இயக்கத்தில் வந்தவை. இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை; வசூலில் சாதனை படைத்தவை. இந்நேரத்தில் கொஞ்சம் காஃபியுடன், கேஜோ எனச் செல்லமாக அழைக்கப்படும் கரண் ஜோஹர் பற்றிப் பேசலாம்.

1972ம் ஆண்டு மும்பையில் யாஷ் ஜோஹர், ஹிரூ ஜோஹருக்கு மகனாகப் பிறந்தவர் கரண் ஜோஹர். சிந்தி பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை யாஷ் ஜோஹர் 1950களில் இருந்து பாலிவுட்டில் இருப்பவர். முதலில் இந்தி சினிமாவில் விளம்பரம் மற்றும் புகைப்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தயாரிப்பாளராக உயர்ந்தார்.
1976ல் ‘தர்மா புரொடக்‌ஷன்ஸை’ ஆரம்பித்தார். சில வெற்றிப் படங்களைத் தந்தார்.

இதனால், தயாரிப்பாளரின் மகனாக வசதிகளுடனே வளர்ந்தார் கரண். பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் வணிகவியல் படித்தார். ‘‘எனது பெற்றோர் நான் சினிமா பிசினஸில் வரக்கூடாது என நினைத்தனர். என் அம்மாவோ எனக்கு நிலையான வேலையும், நிலையான வருமானமும் இருக்கவேண்டுமென ஆசைப்பட்டார். 

சினிமா ஒரு தொழில் அல்ல என்றார். நான் ஆர்ட்ஸ் படிப்பதை அவர் விரும்பவில்லை. அதனாேலயே காமர்ஸ் முடித்தேன். ஒரு நல்ல சிந்து பஞ்சாபி பையனாக அம்மாவின் பேச்சைக் கேட்டேன்...’’ எனச் சிரிக்கிறார் கரண்.

MORE STORIES FROM Kungumam

Kungumam

Kungumam

AI என்ன செய்து கொண்டிருக்கிறது?

மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடையைக் கொளுத்தும் AI

ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

வருது வருது...போனே இல்லாத போன் வருது ..

ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!

ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...

தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!

time to read

1 min

05-06-2026

Kungumam

Kungumam

இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி

சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?

ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..

சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடை நடத்தும் AI

ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

BRAIN STORAGE

பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.

time to read

1 min

05-06-2026

Listen

Translate

Share

-
+

Change font size