Versuchen GOLD - Frei
சவால்களுடன் முடிந்த மோடி 3.0 அரசின் முதலாம் ஆண்டு!
Dinamani Chennai
|June 11, 2025
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஓராண்டையும், தொடர்ந்து பதினோரு ஆண்டு ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் ஆண்டில் செவ்வாய்க்கிழமை அடியெடுத்து வைத்திருக்கிறது.
-
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவில் 303-ஆக இருந்த பாஜகவின் பலம் கடந்த ஆண்டு நடந்த தேர்தல் முடிவில் 240-ஆகக் குறைந்தது ஆளும் கூட்டணி அரசுக்குப் பின்னடைவாகக் கருதப்பட்டது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மத்தியில் ஆட்சியைத் தொடர கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ஒவ்வொரு முக்கியமான முடிவுகளின்போதும் கூட்டணிக் கட்சிகளின் தயவை பிரதமர் மோடி சார்ந்திருப்பாரோ என தொடக்கத்தில் பேசப்பட்டது.
ஆனால், எவ்வித சலனமும் இல்லாமல் முந்தைய இரு ஆட்சிகளைப்போலவே பல்வேறு நடவடிக்கைகளையும் முடிவுகளையும் மோடியின் மூன்றாம் ஆட்சி துணிச்சலுடன் எடுத்துச் செயல்படுத்தியது. 2014, 2019, 2024 என நரேந்திர மோடி கண்ட மூன்று மக்களவைத் தேர்தலில் கடைசியாக அவரது தலைமையிலான ஆட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காததை எதிர்க்கட்சிகள் இப்போதும் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றன. அவற்றுக்கு தனது நிகழ்ச்சிகள் மற்றும் அரசுத் திட்டங்கள் மூலம் பதிலளிக்க மோடி அரசு முயன்று வருகிறது.
ஆனால், அந்தந்த மாநிலத்தின் நலன்கள் மற்றும் தேவைக்கு ஏற்ப தனது சாதனைகளை விளக்கிக் கூறாமல் எங்கும் ஒரே மாதிரியான பிரசார அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது, ஆளும் கூட்டணி அரசு கவனம் செலுத்தி சரிசெய்து கொள்ள வேண்டிய விஷயம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
Diese Geschichte stammt aus der June 11, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியிடம் ரூ.6.58 கோடி மோசடி: மேலும் ஒருவர் கைது
ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியிடம் ரூ.6.58 கோடி மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி கிருஷ்ணகுமார் கௌசல் (60).
1 min
January 13, 2026
Dinamani Chennai
முதல்வர் காப்பீடு மூலம் 1.45 கோடி குடும்பங்கள் பயன்
முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.45 கோடி குடும்பங்கள் பயன் பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
January 13, 2026
Dinamani Chennai
போக்குவரத்துப் பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத் தொகை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 1,03,123 பணியாளர்களுக்கு ரூ.6,14,92,000 சாதனை ஊக்கத் தொகை வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலர் சுன் சோங்கம் ஜடக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1 min
January 13, 2026
Dinamani Chennai
சென்னை பல்கலை.க்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு
சென்னைப் பல்கலை.க்கு நிகழ் நிதியாண்டில் அரசு ரூ.50 கோடியை மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளதாக பல்கலை. துணைவேந்தர், பொறுப்புக் குழு உறுப்பி னர் எஸ்.ஆம்ஸ்ட்ராங் தெரிவித்தார்.
1 min
January 13, 2026
Dinamani Chennai
சென்னையில் சுற்றுலா பொருள்காட்சி தொடக்கம்
சென்னையில் 50-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆகியோர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனர்.
1 min
January 13, 2026
Dinamani Chennai
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ. 1,04,960-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
1 min
January 13, 2026
Dinamani Chennai
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.14ஆம் தேதியும் (புதன்கிழமை) அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
1 min
January 13, 2026
Dinamani Chennai
பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு
மும்பை, ஜன.12: இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த ஐந்து வர்த்தக நாள்களாக ஏற்பட்டு வந்த சரிவு, வங்கி மற்றும் உலோகத் துறை பங்குகளில் ஏற்பட்ட திடீர் எழுச்சியால் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது.
1 min
January 13, 2026
Dinamani Chennai
பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைக் தரும்: வானதி சீனிவாசன்
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை பாஜகவுக்கும், அதிமுக-பாஜக கூட்டணிக்கும் எழுச்சியைத் தரும் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
1 min
January 13, 2026
Dinamani Chennai
ரூ.34 கோடியில் 64 புதிய வாகனங்கள்: மேயர் தொடங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சி பயன்பாட்டுக்காக ரூ.34.40 கோடியில் வாங்கப்பட்டுள்ள 64 புதிய வாகனங்களை மேயர் ஆர். பிரியா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
January 13, 2026
Translate
Change font size
