يحاول ذهب - حر
சவால்களுடன் முடிந்த மோடி 3.0 அரசின் முதலாம் ஆண்டு!
June 11, 2025
|Dinamani Chennai
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஓராண்டையும், தொடர்ந்து பதினோரு ஆண்டு ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் ஆண்டில் செவ்வாய்க்கிழமை அடியெடுத்து வைத்திருக்கிறது.
-
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவில் 303-ஆக இருந்த பாஜகவின் பலம் கடந்த ஆண்டு நடந்த தேர்தல் முடிவில் 240-ஆகக் குறைந்தது ஆளும் கூட்டணி அரசுக்குப் பின்னடைவாகக் கருதப்பட்டது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மத்தியில் ஆட்சியைத் தொடர கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ஒவ்வொரு முக்கியமான முடிவுகளின்போதும் கூட்டணிக் கட்சிகளின் தயவை பிரதமர் மோடி சார்ந்திருப்பாரோ என தொடக்கத்தில் பேசப்பட்டது.
ஆனால், எவ்வித சலனமும் இல்லாமல் முந்தைய இரு ஆட்சிகளைப்போலவே பல்வேறு நடவடிக்கைகளையும் முடிவுகளையும் மோடியின் மூன்றாம் ஆட்சி துணிச்சலுடன் எடுத்துச் செயல்படுத்தியது. 2014, 2019, 2024 என நரேந்திர மோடி கண்ட மூன்று மக்களவைத் தேர்தலில் கடைசியாக அவரது தலைமையிலான ஆட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காததை எதிர்க்கட்சிகள் இப்போதும் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றன. அவற்றுக்கு தனது நிகழ்ச்சிகள் மற்றும் அரசுத் திட்டங்கள் மூலம் பதிலளிக்க மோடி அரசு முயன்று வருகிறது.
ஆனால், அந்தந்த மாநிலத்தின் நலன்கள் மற்றும் தேவைக்கு ஏற்ப தனது சாதனைகளை விளக்கிக் கூறாமல் எங்கும் ஒரே மாதிரியான பிரசார அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது, ஆளும் கூட்டணி அரசு கவனம் செலுத்தி சரிசெய்து கொள்ள வேண்டிய விஷயம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
هذه القصة من طبعة June 11, 2025 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
போகி முன்னெச்சரிக்கை: 9 விமான சேவைகள் ரத்து
போகி பண்டிகையால் ஏற்படும் புகை மூட்டத்தால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக புதன்கிழமை (ஜன.14) 9 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.மீனம்பாக்கம், கவுல் பஜார், பொழிச்சலூர், பம்மல் அனகாபுத்தூர் உள்பட சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் பழைய பொருள்களை எரிக்கும் போது ஏற்படும் கடும்புகை மூட்டத்தால், ஓடுபாதை முற்றிலும் மறைக்கப்பட்டு விடும்.
1 min
January 14, 2026
Dinamani Chennai
நியூஸிலாந்துடன் இன்று 2-ஆவது ஆட்டம் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா - நியூஸிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் புதன்கிழமை (ஜன.14) நடைபெறுகிறது.மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, இந்த ஆட்டத்திலும் வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.
1 min
January 14, 2026
Dinamani Chennai
தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்வு; வெள்ளி விலை புதிய உச்சம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ. 1 லட்சத்து 5,360-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2.92 லட்சத்துக்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
1 min
January 14, 2026
Dinamani Chennai
ரூ.39 கோடியில் 5 வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்
மாதவரம், மணலி, திருவொற்றியூர் மண்டலங்களில் ரூ.39.78 கோடியில் 5 வளர்ச்சித் திட்டப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
January 14, 2026
Dinamani Chennai
பகுதி நேர மகப்பேறு உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு
தமிழகத்தில் பகுதி நேர மகப்பேறு உதவியாளர்களாகப் பணியாற்றி வரும் 1,325 ஆர்சிஹெச் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.5,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.
1 min
January 14, 2026
Dinamani Chennai
தமிழகத்துக்கு தனி செயற்கை நுண்ணறிவு மையம்: ரூ.10,000 கோடியில் சென்னையில் அமைக்க ஒப்பந்தம்
தமிழகத்துக்கு தனியாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையத்தை சென்னையில் ரூ.10,000 கோடி முதலீட்டில் சென்னை ஐஐடியுடன் இணைந்து உருவாக்க சர்வம் ஏஐ நிறுவனத்துடன் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
1 min
January 14, 2026
Dinamani Chennai
குடியரசு துணைத் தலைவர் இன்று கோவை வருகை; திருப்பூரில் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்
குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் புது தில்லியிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் புதன்கிழமை (ஜன.14) வருகிறார்.குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது சொந்த ஊரான திருப்பூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ளார்.
1 min
January 14, 2026
Dinamani Chennai
வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் இதுவரை சிறைபிடிக்கப்பட்ட 83 மீனவர்கள், 252 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க அந்த நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
1 min
January 14, 2026
Dinamani Chennai
சீனா வழியே எவரெஸ்டை அடையும் திட்டம்: தமிழக இளைஞருக்கு அமைச்சர் பாராட்டு
சீனாவின் வழியே புதிய பாதையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்குத் திட்டமிட்டுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞருக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் நல்லசாமி (26).
1 min
January 14, 2026
Dinamani Chennai
போத்தனூர்-சென்ட்ரல் ஒரு வழிச்சிறப்பு ரயில்: ஜன.18-இல் இயக்கம்
போத்தனூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒருவழிச் சிறப்பு ரயில் வருகிற ஜன.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கோவை போத்தனூரிலிருந்து ஜன.18-ஆம் தேதி காலை 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06144) மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
1 min
January 14, 2026
Translate
Change font size
