Versuchen GOLD - Frei

குஜராத்தில் டாடா ராணுவ விமான ஆலை

Dinamani Chennai

|

October 29, 2024

ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்தில் டாடா ராணுவ விமான ஆலை

குஜராத்தின் வதோதரா நகரில் நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

‘டாடா’ குழுமம் அமைத்துள்ள இந்த ஆலையில் ‘ஏர்பஸ்’ விமானத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சி-295 ராணுவப் பயன்பாட்டு விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன.

இந்திய விமானப் படையின் பழைய அவ்ரோ-748 விமானங்களுக்குப் பதிலாக 56 ‘சி-295’ விமானங்களை வாங்குவதற்கு ‘ஏர்பஸ்’ நிறுவனத்துடன் சுமார் ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி 4 ஆண்டுகளுக்குள் ஸ்பெயினின் ஏர்பஸ் உற்பத்தி ஆலையில் தயார் நிலையில் முதல் 16 விமானங்களையும், மீதமுள்ள 40 விமானங்களை ஏர்பஸ்-டாடா நிறுவனங்களுக்கிடையிலான தொழில் உடன்பாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள டாடா உற்பத்தி ஆலை மூலம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த உற்பத்தி ஆலையின் திட்டம் கடந்த 2012-இல் அப்போதைய ‘டாடா சன்ஸ்’ குழுமத் தலைவர் ரத்தன் டாடாவால் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையான ‘டாடா விமான வளாகம்’ தொழிற்சாலையின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் 2.5 கி.மீ. தொலைவுக்கு வாகனப் பேரணியில் சென்றனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

பிரதமர் மோடி இன்றும், நாளையும் மேற்கு வங்கம், அஸ்ஸாமில் சுற்றுப் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி ஜன.17, 18ஆம் தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு: முதல்வர் பங்கேற்கிறார்

மதுரை அலங்காநல்லூரில் சனிக்கிழமை (ஜன.17) நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் மு. க. ஸ்டாலின் பார்வையிடுகிறார்.பொங்கல்பண்டிகையையொட்டி, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

இன்று ராமேசுவரத்துக்கு சிறப்புப் பேருந்துகள்

தை அமாவாசை ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) வருவதால், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து ராமேசுவரம் செல்ல சனிக்கிழமை (ஜன. 17) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தை அமாவாசையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) ராமேஸ்வரத்துக்கு அதிக அளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்தும், சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கு சனிக்கிழமையும் (ஜன. 17), ராமேசுவரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகளும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) இயக்கப்படவுள்ளன.

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

காணும் பொங்கல்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

காணும் பொங்கலையொட்டி, சென்னை மாநகர் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.17) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 mins

January 17, 2026

Dinamani Chennai

17 காளைகளைப் பிடித்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு

பாலமேடு ஜல்லிக்கட்டில் 17 காளைகளைப் பிடித்த மதுரை பொந்துகம்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அஜித் முதலிடம் பெற்றார்.

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

மக்களவை விசாரணைக் குழுவுக்கு எதிரான நீதிபதி வர்மாவின் மனு தள்ளுபடி

மக்களவைத் தலைவர்விசாரணைக்குழு அமைத்ததற்கு எதிராக அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

January 17, 2026

Dinamani Chennai

8 நகரங்களில் மிதமான சரிந்த வீடுகள் விற்பனை

வீடுகள் விலை உயர்வு மற்றும் தேவை அதிகரிக்காததன் காரணமாக இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த 2025-ஆம் ஆண்டில் மிதமாகச் சரிந்துள்ளது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய வழக்கு: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வாழ்க்கை அனுபவங்களை இலக்கியங்கள் கற்றுத் தரும்!

திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

அதிமுக நிர்வாகி தற்கொலை

கடன் தொல்லையால் அதிமுக நிர்வாகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

time to read

1 min

January 17, 2026

Translate

Share

-
+

Change font size