Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

தாம்பரம் அல்ல... வளையல் புரம்...!

Kungumam

|

16-01-2026

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்துப் பெண்களும் விரும்பி அணியும் அணிகலன்களில் ஒன்று வளையல்.

- ப்ரியா

தாம்பரம் அல்ல... வளையல் புரம்...!

வீட்டில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் முதலில் அவர்களின் பிஞ்சுக் கரங்களில் அழகான வளையல் அணிந்து அழகு பார்க்க ஒவ்வொரு பெற்றோரும் விருப்பப்படுவார்கள்.

ஆம். வளையல்களை விரும்பாத வளைக்கரங்களே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

தங்கம், வெள்ளி மட்டுமில்லாமல் கண்ணாடி, மெட்டல், ஐம்பொன், டிசைனர்... என வளையல்களில் பல ரகங்கள் உள்ளன. அதில் எந்தவித சுப நிகழ்வுகளுக்கும் அனைத்துப் பெண்களும் தேர்வு செய்வது கண்ணாடி வளையல்களைத்தான்.

திருமணம் முதல் வளைகாப்பு மட்டுமில்லாமல், வீட்டில் கொண்டாடப்படும் வரலட்சுமி பூஜை, விளக்கு பூஜை போன்ற சுபநிகழ்வுகளுக்கும் பெண்களுக்கு கண்ணாடி வளையல்களைக் கொடுப்பது இன்று வரை வழக்கமாக உள்ளது. மேலும் ஒவ்வொரு ஆடி மாதமும் அம்மனை முழுக்க முழுக்க கண்ணாடி வளையல் கொண்டு அலங்கரிப்பது வழக்கம்.

தங்க வளையல்கள் இருந்தாலும் அதற்கிடையே உடைக்கு ஏற்ப கண்ணாடி வளையல்களை அணியத்தான் பெண்கள் விரும்புகிறார்கள்.

அப்படி அனைவரும் விரும்பும் கண்ணாடி வளையல்களை இன்றைய மாடர்ன் பெண்கள் விரும்பும் வகையில் பல டிசைன்களில் விற்பனை செய்து வருகிறார் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி. இவரின் 'ஸ்ரீசம்பிரதாய ஸ்டோர்' கடையில் ஒரு தளம் முழுக்க முழுக்க பல வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் கண்ணாடி வளையல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 'வளையோசை அம்மாச்சி' என்று செல்லமாக அழைக்கப்படும் ராஜராஜேஸ்வரி தன் பயணம் குறித்து உற் சாகத்துடன் பேசத் தொடங்கினார்.

“இந்த வளையல்கள்தான் என் குலதெய்வம். இந்தத் தொழிலை நான் மட்டுமில்லை, என் கணவர், இரண்டு மகள்கள் மற்றும் மகன்கள் என குடும்பமாகச் செய்து வருகிறோம். எங்க ஆறு பேரின் கடின உழைப்புதான் எங்களின் வெற்றியின் ரகசியம்.

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை தாம்பரத்தில்தான். அப்பா பெயின்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார். எங்க அம்மா இல்லத்தரசி. என்னையும் சேர்த்து என் கூடப் பிறந்தவங்க ஆறு பேர்.

என் அப்பா பிழைப்புக்காக ஊரு விட்டு ஊரு வந்தவர். அப்படி வந்த போது என் அம்மாவின் அம்மாதான் அவருக்கு அடைக்கலம் கொடுத்தாங்க. பாட்டி வீட்டில் தங்கித்தான் அப்பா வேலை பார்த்து இருக்கார். அதனால் என் பாட்டி என் அம்மாவை அவருக்கு கல்யாணம் செய்து வச்சாங்க.

WEITERE GESCHICHTEN VON Kungumam

Kungumam

Kungumam

கிராம மக்களுக்காக தனி மனிதர் கட்டிய மூங்கில் பாலம்!

இந்தியாவில் மலைப்பகுதிகளிலும், நதிக்கரைகளிலும், தொலைதூர கிராமங்களிலும் வாழ்பவர்களின் முக்கியப் பிரச்னையே போக்குவரத்து வசதிதான்.

time to read

1 mins

16-01-2026

Kungumam

Kungumam

ஜென் Z தலைமுறையிலிருந்து ஒரு நகராட்சித் தலைவர்!

இந்தியாவின் இளம் நகராட்சித் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கேரளாவைச் சேர்ந்த தியா பினு புலிக்காகண்டம்.

time to read

1 mins

16-01-2026

Kungumam

Kungumam

பொதுமக்களின் பார்வைக்கு...விக்டோரியா பப்ளிக் ஹால்!

சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களில் ஒன்று விக் சடோரியா பப்ளிக் ஹால். பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கிற்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையிலுள்ள இந்த அரங்கம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

time to read

3 mins

16-01-2026

Kungumam

Kungumam

30ல் ஒருவர் இந்த இந்தியர்!

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்குட்பட்ட, 30 ஆளுமைகளைப் பட்டியலிடுவது, 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகையின் வழக்கம்.

time to read

1 mins

16-01-2026

Kungumam

Kungumam

இளையராஜா இசையில் பாடுவதற்காகவே படங்களை தயாரித்து நடிக்கிறார் இந்த அமெரிக்கப் பெண்!

பிறந்தது, வளர்ந்தது அமெரிக்காவாக இருந்தாலும் தமிழில் பொளந்துகட்டுகிறார் சிந்தியா லூர்டே. இளையராஜா இசையில் பாட வேண்டும் என்ற லட்சியத்துக்காகவே இளையராஜா இசையில் படம் தயாரித்தவர் என்பது இவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்.

time to read

2 mins

16-01-2026

Kungumam

Kungumam

தாம்பரம் அல்ல... வளையல் புரம்...!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்துப் பெண்களும் விரும்பி அணியும் அணிகலன்களில் ஒன்று வளையல்.

time to read

5 mins

16-01-2026

Kungumam

Kungumam

சினிமா இன்சூரன்ஸில் தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை!

பொதுவாக எல்லோருக்குமே இன்சூரன்ஸ் பற்றி ஓரளவுக்குத் தெரியும். இதில் உடல்நலம், வணிகம், வாகனம், பயணம் உள்ளிட்ட பலவிதமான இன்சூரன்ஸ்கள் உள்ளன.

time to read

2 mins

16-01-2026

Kungumam

Kungumam

இலவசப் புத்தகம்!

‘வீட்டைக் கட்டிப்பார்' என்று சொன்னவன் எவனாவது 'வீட்டை மாற்றிப் பார்' என்று சொல்லியிருக்கிறானா?

time to read

2 mins

16-01-2026

Kungumam

Kungumam

நட்சத்திரங்கள் பாதி... பூர்ணிமா ராமசாமி காஸ்டியூம்ஸ் மீதி!

ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமிக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.

time to read

2 mins

16-01-2026

Kungumam

Kungumam

பெண்களுக்கு மட்டும் செல்போன் தடை...

இது பஞ்சாயத்து அட்ராசிட்டி!

time to read

1 min

16-01-2026

Listen

Translate

Share

-
+

Change font size