Facebook Pixel சம்யுக்கையின் வேம்புலி.! | Penmani - womens-interest - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

சம்யுக்கையின் வேம்புலி.!

Penmani

|

August 2025

கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.

- ஜே. செல்லம் ஜெரினா

சம்யுக்கையின் வேம்புலி.!

காற்றில் இன்னும் மழையின் தாக்கம் இருந்தது. தரை 'ஜிலீரெ'ன்று பாதத்தை பதம் பார்க்க வெளியே பார்த்தவளின் விழிகளில் அந்த வித்தியாசம் விழுந்தது. கண்கள் தெறித்து விடும்போல பெரிதாகின. எதிர் வீடு பக்கத்து வீட்டு மனிதர்களோடு அப்பாவும் நிற்க,

'அப்பா'

'சம்யுக்தா! ஒன்னுமில்லே! ஒன்னுமில்லே கீழே தண்ணீயா கெடக்கு பாத்து வா' அப்பா இரண்டெட்டில் நகர்ந்து கையை பிடித்துக் கொண்டார். மகளின் மனசு புரிந்தது. நினைவு தெரிந்த நாளாகவே மகளின் தோழியல்லவா இந்த வேம்புலி?

'எப்...எப்படிப்பா? '

'ப்ச்! ராத்திரியெல்லாம் மழையடிச்சு ஊத்துச்சேம்மா. புயல்காத்துல...'

அருகில் போய் அதைத் தொட்டாள். மழைத்தண்ணீரில் ஊறிப்போய் சிலிரென்றிருந்தது.

'நான் சொன்னது உன்னைத் தாக்கிடுச்சா? நான் ஒரு வார்த்தை உன்னை சொல்லக் கூடாதா? எப்படி மனசு வந்துச்சு என்னை விட்டுப் போக' சம்யுக்தா மௌனமாகக் கேட்டாள்.

வேம்புலி வீதிக்கு குறுக்கே கிளைகளைப் பரப்பிக் கொண்டு காம்பவுண்டு சுவரை பிளந்து தள்ளிக் கொண்டு பிரம்மாண்ட ராட்சசனைப் போல் விழுந்திருந்தது. சின்ன வயதில் தாத்தாவின் கைப்பிடித்துக் கொண்டு இதனுடைய நிழலில் பேசிய நாட்கள். காற்றில் கலந்து நாசியிலேறும் வேப்பம் பூ வாசம். கசந்தாலும் உடலுக்கு நல்லது என ருசிபார்க்க பழகிய வேப்பம் பழம். மடியில் சேகரிக்கும் வேப்ப முத்துக்கள் சொப்பு வைத்து விளையாடிய போதுகள். பக்கத்து வீட்டு ப்ருத்வியோடு விவரம் புரியாத வயதில் அப்பா அம்மா விளையாட்டு விளையாடிய நேரங்கள்...சமையல் செய்வது போல இவள் பாவனை செய்ய அவன் கடைக்கு போவது பேப்பர் படிப்பது சாப்பிடுவது சண்டை போடுவது போலெல்லாம் நடித்து சிரித்த நாட்கள்..

அவளின் விரல் மரத்தில் கோணல் மாணலாய் செதுக்கியிருந்த 'ப்ருத்' எனும் எழுத்துக்களை தடவியது.

ப்ருத்வி காம்பஸால் தன் பெயரை அதில் செதுக்கும் போதே வந்தவள் கோபத்தோடு பிடுங்கியெறிந்தாள் பேரை முடிக்கு முன்னரே. அவன் கோபமாய்க் கத்த இவள் அழுது கொண்டே

'ச்சீ! போடா! உன்னைக் குத்தினால் வலிக்கிறாப் போலத்தானே இதுக்கும் வலிக்கும். உன் பேரெழுத இதான் கிடைச்சுதா. போயி அந்த செவுத்துலே எழுது’ என்று மூக்கு விடைக்க பேசினாள்.

‘போடி பைத்தியம்! இது மரம். வலிக்கவெல்லாம் செய்யாது.’

Penmani'den DAHA FAZLA HİKAYE

Penmani

Penmani

கால்பந்து விளையாட்டு உருவான நாடு!

கால்பந்து (Football) விளையாட்டுக்கான ஆரம்ப வடிவங்கள் பண்டைய சீனாவில் (Cuju), கிரேக்கத்திலும் ரோமிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தன.

time to read

1 min

April 2026

Penmani

Penmani

காலம் கடந்தும் நிற்கும் நீதி!

ஜெர்மனி ஒரே நாடாக உருவாவதற்கு முன்னர் சிறு சிறு நாடுகளாக இருந்தன அவைகளில் 'பிரஷ்யா'வும் ஒன்று பிரஷ்யாவில் மகா பிரடரிக் (1712-1786) அரசராக இருந்தவர்.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

அளவிற்கு மிஞ்சினால்..

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. என்பது உணவிற்கு மட்டும் பொருந்தும் பழமொழி அல்ல. நம் வாழ்க்கை நியதிகளுக்கும் உட்பட்ட பழமொழி என்றுதான் கூறவேண்டும்! எதுவுமே, நம் உணர்வுகள், பழக்கங்கள், பேச்சு, நடை, உடை, பாவனை, பாசம், நேசம் அனைத்தும் ஒரு எல்லைக்குள் இருக்கும்போது சிக்கல்கள் இல்லை.

time to read

2 mins

April 2026

Penmani

Penmani

அருமருந்து அத்தி!

அத்தி பழத்தில் சீமை அகத்தி நாட்டு அகத்தி என இருவகை உண்டு.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

விதவிதமான வடாம் வத்தல் வகைகள்...

கோடை பிறந்து விட்டாலே வெயில் அதிகமாக இருக்கும்.

time to read

4 mins

April 2026

Penmani

Penmani

ஜென் தத்துவம். நீ நீயாகவே!

'எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!' என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். ஜென் குருமார்கள். இதில் சூசகமான ஒரு தத்துவம் உண்டு. வாழ்க்கையை அதன்போக்கில் விட்டு விடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம்.

time to read

3 mins

April 2026

Penmani

Penmani

புத்தர் பிறந்த புனித பூமி: எழில் கொஞ்சும் நேபாளம்!

உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தினைக் கொண்டுள்ள நேபாளம் இயற்கையழகு, ஆன்மிகம், சாகசம், பயணங்கள் போன்றவைகளுக்குப் புகழ்பெற்ற நாடாகும்.

time to read

4 mins

April 2026

Penmani

Penmani

எடைக்கு எடை வெல்லம் துலாபாரம்!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மேடாரம். ஆனால் புகழ் பெற்றது.

time to read

2 mins

April 2026

Penmani

Penmani

பூக்கூடை

பிரிட்டனில் உள்ள மிகப் பழமையான இந்திய உணவகத்தின் பெயர் வீராசாமி.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

பழனி மலை பயணம்!

மழையும் குளிரும் பனியுமாக இருக்கும் இந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் மலை பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது பெரு விருப்பங்களில் ஒன்று.

time to read

4 mins

April 2026

Translate

Share

-
+

Change font size