Facebook Pixel 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | DINACHEITHI - NAGAI - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

DINACHEITHI - NAGAI

|

June 21, 2025

சென்னை ஜூன் 21தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (20.6.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம்-கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ரூ.36.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், துணை வேந்தர், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான குடியிருப்புகளைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல், அதன் வாயிலாகப் பரவலாக உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், புதிய முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டுப் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் "புதுமைப் பெண்" திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலப் "தமிழ்ப் புதல்வன்" திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

DINACHEITHI - NAGAI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - NAGAI

தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தமிழக அமைச்சரிடம் ரூ. 4,000 வாங்கிக் திருச்செந்தூர் கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

திருச்செந்தூர் கோவிலில் முறைகேடு செய்தோர் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பேட்டி

time to read

1 mins

May 30, 2026

DINACHEITHI - NAGAI

பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்- சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - NAGAI

கடும் வெயிலால் பொதுமக்கள் தவிப்பு: சென்னையில் மேலும் 2 நாட்கள் வெப்ப அலை நீடிக்கும்

கோடை காலத்தில் சென்னையில் ஏற்பட்ட காலமாற்றத்தால் வங்க கடலில் இருந்து ஈரப்பதம் கொண்ட வடகிழக்கு கடல் காற்று வீசியதால் நேற்று வெப்பம் தணிந்து இருந்தது.

time to read

1 min

May 25, 2026

DINACHEITHI - NAGAI

வி.சி.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

time to read

1 min

May 25, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக இந்தியா மாறும்: ராஜ்நாத் சிங் பேச்சு

மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையும், தனியார் துறையின் புதிய கண்டுபிடிப்புகளும் ஒன்றாக இணையும்போது, நாடு புதிய உச்சங்களை தொடும் என ராஜ்நாத் சிங் கூறினார்.

time to read

1 min

May 25, 2026

DINACHEITHI - NAGAI

ஆப்பிரிக்க பயணத்தை தவிர்த்து விடுங்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், எபோலா வைரஸ் பரவலாக பரவி வருகிறது.

time to read

1 min

May 25, 2026

DINACHEITHI - NAGAI

‘மாஸ்டர் பிளான்’ உடன் டெல்லி செல்ல தயாராகும் முதல்-அமைச்சர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் டெல்லி சி.பி.ஐ. முன்பு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக விலை உயர்ந்தது

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - NAGAI

கோவை சிறுமி கொலை: தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீசு

time to read

1 min

May 24, 2026

Translate

Share

-
+

Change font size