Denemek ALTIN - Özgür

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

DINACHEITHI - DHARMAPURI

|

September 29, 2025

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த துயரமான சம்பவத்தால், கரூர் மாவட்டம் முழுவதும் இன்று துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

கரூர் எம்.பி. ஜோதிமணி, செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"கரூரில் நிகழ்ந்திருப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத, நெஞ்சு வெடிக்கக் கூடிய துயரமான சம்பவம். தொக்குப்பட்டி, பசுபதிபாளையம், ஏமூர், காந்திகிராமம் என பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. கரூர் மிகவும் அமைதியான ஊர். இது போன்ற அமைதியான ஊரை பார்க்கவே முடியாது. நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். இங்கு இப்படி ஒரு துயரத்தை பார்த்ததே இல்லை. காரணத்தைப்பற்றியோசிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை. சனிக்கிழமை என்பது சம்பளம் போடும் நாள். கரூரில் சனிக்கிழமை என்பது பரபரப்பான நாளாக இருக்கும்.

கூட்டம் நடத்துவதற்கு நகருக்கு உள்ளேயே இடம் வேண்டும் என்று கேட்டார்கள். முதலில் உழவர் சந்தையை கேட்டார்கள். ஆனால் காவல் துறையினர் கூட்ட நெரிசலை கணித்துதான் இந்த இடத்தை கொடுத்திருக்கிறார்கள். நம் மக்களுக்கு நடந்தது இனிமேல் தமிழகத்தில் யாருக்கும் நடக்கக் கூடாது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கரூர் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் இதுவரை 30 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - DHARMAPURI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்

லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்

time to read

1 mins

January 04, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

January 04, 2026

DINACHEITHI - DHARMAPURI

பழைய ஓய்வூதியத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்

அதிகாரிகள் தகவல்

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

3 mins

January 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வங்க கடலில் 6-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை: டிரோன்களுக்கு தடை

துணை ஜனாதிபதியாக சி. பி. ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சிகரெட், பீடி விலை உயர்வு: புதிய வரி விதிப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

time to read

1 min

January 02, 2026

Translate

Share

-
+

Change font size