Versuchen GOLD - Frei
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
DINACHEITHI - DHARMAPURI
|September 29, 2025
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
-
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த துயரமான சம்பவத்தால், கரூர் மாவட்டம் முழுவதும் இன்று துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.
கரூர் எம்.பி. ஜோதிமணி, செய்தியாளர்களிடம் பேசியதாவது;-
"கரூரில் நிகழ்ந்திருப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத, நெஞ்சு வெடிக்கக் கூடிய துயரமான சம்பவம். தொக்குப்பட்டி, பசுபதிபாளையம், ஏமூர், காந்திகிராமம் என பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. கரூர் மிகவும் அமைதியான ஊர். இது போன்ற அமைதியான ஊரை பார்க்கவே முடியாது. நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். இங்கு இப்படி ஒரு துயரத்தை பார்த்ததே இல்லை. காரணத்தைப்பற்றியோசிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை. சனிக்கிழமை என்பது சம்பளம் போடும் நாள். கரூரில் சனிக்கிழமை என்பது பரபரப்பான நாளாக இருக்கும்.
கூட்டம் நடத்துவதற்கு நகருக்கு உள்ளேயே இடம் வேண்டும் என்று கேட்டார்கள். முதலில் உழவர் சந்தையை கேட்டார்கள். ஆனால் காவல் துறையினர் கூட்ட நெரிசலை கணித்துதான் இந்த இடத்தை கொடுத்திருக்கிறார்கள். நம் மக்களுக்கு நடந்தது இனிமேல் தமிழகத்தில் யாருக்கும் நடக்கக் கூடாது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கரூர் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் இதுவரை 30 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Diese Geschichte stammt aus der September 29, 2025-Ausgabe von DINACHEITHI - DHARMAPURI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு
“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு
காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
1 min
December 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்
மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min
November 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்
சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
1 mins
November 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையை நோக்கி ‘டித்வா' புயல் நகருகிறது
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது
2 mins
November 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னைக்கு 410 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல்: மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.
1 min
November 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
மக்களுக்காக களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும் - உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
1 min
November 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
“உறவினர் பெயர் கட்டாயம் அல்ல” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவிப்பு
\"எஸ்.ஐ.ஆர், படிவத்தில் தெரிந்த விவரங்களை நிரப்பிக்கொடுத்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறும். உறவினர் பெயர் கட்டாயம் அல்ல\" என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்து உள்ளார்.
1 min
November 28, 2025
Translate
Change font size

