Prøve GULL - Gratis

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

DINACHEITHI - DHARMAPURI

|

September 29, 2025

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த துயரமான சம்பவத்தால், கரூர் மாவட்டம் முழுவதும் இன்று துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

கரூர் எம்.பி. ஜோதிமணி, செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"கரூரில் நிகழ்ந்திருப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத, நெஞ்சு வெடிக்கக் கூடிய துயரமான சம்பவம். தொக்குப்பட்டி, பசுபதிபாளையம், ஏமூர், காந்திகிராமம் என பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. கரூர் மிகவும் அமைதியான ஊர். இது போன்ற அமைதியான ஊரை பார்க்கவே முடியாது. நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். இங்கு இப்படி ஒரு துயரத்தை பார்த்ததே இல்லை. காரணத்தைப்பற்றியோசிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை. சனிக்கிழமை என்பது சம்பளம் போடும் நாள். கரூரில் சனிக்கிழமை என்பது பரபரப்பான நாளாக இருக்கும்.

கூட்டம் நடத்துவதற்கு நகருக்கு உள்ளேயே இடம் வேண்டும் என்று கேட்டார்கள். முதலில் உழவர் சந்தையை கேட்டார்கள். ஆனால் காவல் துறையினர் கூட்ட நெரிசலை கணித்துதான் இந்த இடத்தை கொடுத்திருக்கிறார்கள். நம் மக்களுக்கு நடந்தது இனிமேல் தமிழகத்தில் யாருக்கும் நடக்கக் கூடாது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கரூர் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் இதுவரை 30 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

“டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும்”என அறிவிப்பு

சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். என மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

time to read

2 mins

November 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

2 mins

November 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

அடுத்தடுத்து கோவை வரும் பிரதமர் மோடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

time to read

1 min

November 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும்

கொளத்தூரில் நடந்த முகவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

time to read

1 min

November 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்பாரா?

பாட்னா, நவ. 15காட்டுகிறது. பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் | மட்டும் வெற்றி பெற்றுள்ளது. எனவே மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில் 10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்- மந்திரியாக பதவி ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

time to read

2 mins

November 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னை பெரியமேட்டில் சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவல்நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார்

time to read

1 min

November 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

பீகார் தேர்தல்: முதல்முறையாக மறுவாக்குப்பதிவு இல்லை, உயிரிழப்பு இல்லை

பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

time to read

1 min

November 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

November 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்

உச்சநீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

November 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா பட்டு விற்பனை வளாகம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

November 14, 2025

Translate

Share

-
+

Change font size