Facebook Pixel பரதம் எனது மூச்சுக் காற்று! | Penmani - womens-interest - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பரதம் எனது மூச்சுக் காற்று!

Penmani

|

June 2026

மூன்றாம் தலைமுறை பரதநாட்டியக் கலைஞர் மற்றும் பரதம் கற்பிக்கும் ஆசிரியராக விளங்குபவரும்; புகழ்பெற்ற நடனக் கலைஞர் பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரனிடம் நடனத்தில் மேற் பயிற்சியைப் பெற்றவரும்; உலகம் முழுவதும் பயணித்து நிகழ்வுகளை நடத்தியவரும்; நிருத்திய நிபுணா போன்ற பல விருதுகளை வாங்கியவரும்; மும்பை கலாசதன் நுண்கலைக் கழக குடும்பத்தின் முக்கிய அங்கத்தினருமாகிய பரத நாட்டியக் கலைஞர் திருமதி நந்தினி கணேசன், பெண்மணிக்காக அளித்த சுவையான பேட்டி இதோ:

- -ஆர். மீனலதா, மும்பை

பரதம் எனது மூச்சுக் காற்று!

தங்களைப் பற்றி கூறுங்கள்.....

மும்பை வாசியாகிய நான் குரு கலாசதன் மணியின் பேத்தி. எனது பெற்றோர்கணேசன் மற்றும் சாரதா ஆவார்கள். பரதக் கலையை மூச்சாகக் கொண்ட குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைக் கலைஞராகவும், நடனத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறேன். தாத்தா மணி தான் எனது குரு.

திருச்சூரை சேர்ந்த எனது தாத்தா தெற்கு மும்பையில் உள்ள இன்டர்நேஷனல் புக் ஹவுசில் பணிபுரிய வந்த போது, கலை எண்ணம் கொண்டவர்களுடன் சேர்ந்து சேத்தனா எனும் கலாச்சார மையத்தை ஆரம்பித்தார்.

உங்கள் தாத்தாவுக்கு பரதநாட்டியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது எவ்வாறு....?

தாத்தா ஆரம்பித்த சேத்தனா கலாச்சார மையத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மும்பைக்கு வரும் மூத்த நடனக் கலைஞர்களும், இசைக் கலைஞர்களும் இங்கு வந்து நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். பரத நாட்டியக் கலையால் ஈர்க்கப்பட்ட தாத்தா, தயக்கங்களை ஒதுக்கி விட்டு, தன்னுடைய 40 - ஆவது வயதில் மாதுங்காவிலுள்ள ராஜ ராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திரின் கலைமாமணி குப்பையா பிள்ளையின் மகளான குரு கருணாம்பாள் கோவிந்தராஜ பிள்ளையிடம் நடனம் கற்க ஆரம்பித்தார். இவரிடம் எனது தாத்தா நடனம் கற்க வந்த போது, “மணி ஒரு கலைக் குடும்பத்தை உருவாக்குவார் என்று நாங்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்கவில்லை. வகுப்பில் கற்கும் மற்ற சிறுமிகளை விட, அதிக நளினத்துடன் மணி ஆடுகிறார்" என்று அவருடைய குரு கூறுவாராம்.

ராஜ ராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திரில் தனது பயிற்சியை முடித்த பிறகு, மும்பையின் பல்வேறு புறநகர்ப் பகுதிகளுக்கும் பயணம் செய்து மாணவர்களுக்கு தனித்தனியாக கற்பிக்கத் தொடங்கினார். பின்னர் சயானில் உள்ள தன்னுடைய வீட்டில் 1954 - ஆம் ஆண்டு கலாசதன் நுண்கலை கழகத்தை நிறுவினார். அவருக்கு இரண்டு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர். அனைவருமே பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம் கற்பித்தல், மிருதங்கம் மற்றும் வயலின் போன்ற வாத்தியக் கருவிகளை வாசித்தல் போன்றவைகளில் ஈடுபட்டிருந்தனர். குரு மறைந்து அநேக ஆண்டுகள் ஆனபிறகும், அவர் ஆரம்பித்த பாரம்பரியத்தை, கலாசதன் அமைப்பு தொடர்ந்து நடத்தி வருகிறது.

MORE STORIES FROM Penmani

Penmani

Penmani

அணியும் உடையில் அழகின் ரகசியம்!

ஆள் பாதி, ஆடை பாதி' என்று சும்மாவா சொன்னார்கள். ஒருவர் அணியும் ஆடையில் இருந்தே அவரது குணத்தை நாம் அளந்து விடலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நாவிற்கினிய ஜாம் வகைகள்!

பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நல் வாழ்விற்கு யோகா..

'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது தத்துவப் பாடலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால் யதார்த்த வாழ்வில் காற்றுப்போகும் வரை அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை; ஏன், பொறுப்பும் கூட!

time to read

4 mins

June 2026

Penmani

Penmani

பிரபலங்களின் சுவாரசியங்கள்!

அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆப்ரஹாம்லிங்கன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாதிரியார் அவரை சந்தித்தார்.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

உலகமே வியக்கும் மாயன் நாகரீகம்!

மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!

இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.

time to read

2 mins

June 2026

Penmani

Penmani

பூக்கூடை

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.

time to read

1 mins

June 2026

Penmani

முத்துச்சிதறல்

மாருதி மறைந்தாலும் அவரது ஓவியங்கள் மறக்க முடியாதவை என்பதை அட்டைப் பட அழகோவியங்கள் பறைசாற்றுகின்றன. -ஆர்.ஆர். உமா. திசையன்விளை.

time to read

1 mins

June 2026

Penmani

Penmani

வழிகள் ஆயிரம் வாசல்கள் ஆயிரம்

பேச்சியப்பனுக்கு அழுகை முட்டியது. இதயம் விம்மித் தவித்தது.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

ஆழ்மனதின் அற்புதம்!

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.

time to read

1 min

June 2026

Listen

Translate

Share

-
+

Change font size