Try GOLD - Free
5 மினிட்ஸ் சேலன்ச்!
Kanmani
|June 17, 2026
நேற்று இரண்டு நோயாளிகளைச் சந்தித்தேன்.
ஒரு பெண்மணி, உடம்புல எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா திடீர்னு மனசுக்கு நல்லாவே இல்ல.. எந்த வேலையானாலும் தள்ளித் தள்ளிப் போடுறேன் என்றார். இன்னொருவர் கிட்டத்தட்ட அதே வயதில் இருக்கும் ஆண். அதிக பரபரப்பாக இருப்பதாகவும், எப்போது பார்த்தாலும் நேரத்தைப் பார்த்துக் கொண்டே இயங்குவதாகவும், எதிலும் தடங்கல் வரக்கூடாது, ஒரு கடைக்கு பில் போட வரிசையில் நிற்கையில் காத்திருக்க நேர்ந்தாலும் கூட பதட்டமாகிறது என்றும் கூறினார்.
‘இதெல்லாம் தப்புன்னு தெரியுது, ஆனா எப்படி என்னை சரி பண்ணிக்கிறதுன்னு தெரியல' என்பது இரண்டு பேருமே கூறிய விஷயம்.
முதுகு வலி, கண் பிரச்சனை இப்படி வெவ்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்காக அவர்கள் வந்திருந்தாலும் தங்களுடைய பழக்கவழக்கங்களில் வரும் இத்தகைய இடர்ப்பாடுகள் அவர்களுக்குத் தொந்தரவாகத் தெரிந்தது. இதை மாற்றவே முடியாதா என்று ஆதங்கப்பட்டனர்.
அவர்களுக்கு நான் CBT (Cognitive behavioural therapy) சிகிச்சை பற்றிக் கூறினேன். இது நம் பழக்க வழக்கத்தை மாற்றியமைப்பதற்காக உளவியலாளர்களால் செய்யப்படும் ஒரு சிகிச்சை. அதை நமக்கு நாமே முயன்று பார்க்க முடியும். முன்பு நாம் பேசிய சுய ஹிப்னாசிஸ் முறைகளைப் போலத்தான் இதுவும்.
இவர்கள் இருவருக்கும் உளவியல் சிகிச்சையைத் தொடங்கவில்லை என்றாலும் சிறிய ஆலோசனை ஒன்றைக் கூறினேன். அந்தப் பெண்ணிடம், ‘பைவ் மினிட்ஸ் சேலஞ்ச்'ன்னு ஒன்னு இருக்கு.. இப்ப நீங்க வேலையெல்லாம் குவிஞ்சு கிடக்கு, எதையுமே செய்யத் தோணலைன்னு சொல்றீங்கல்ல.. மொபைல் ஃபோனை எடுங்க.. அஞ்சு நிமிஷத்துக்கு டைமர் செட் பண்ணுங்க.. இருக்குற வேலையில் ஏதோ ஒண்ணைத் தொடங்கி அஞ்சே அஞ்சு நிமிஷம் மட்டும் செய்யணும்னு முடிவு பண்ணி ஆரம்பிங்க என்றேன்.
சரி டாக்டர்! நாலு நாளா துவச்ச துணிகள் மடிக்காம இருக்கு.. அஞ்சு நிமிஷம் மட்டும் போய் துணியை மடிக்கிறேன் என்றார் அந்தப் பெண்மணி.
அந்த ஐந்து நிமிட வேலை தரும் உற்சாகத்தில் தொடர்ச்சியாக 15 நிமிடம் வேலை செய்து அவரால் அனைத்துத் துணிகளையும் மடித்து வைத்து விட முடியும். இதே போல் தேவையான ஓய்வு எடுத்துக்கொண்டு, வேலைகளை ஐந்தைந்து நிமிட சேலஞ்சுகளாக செயல்படுத்தினால் வேலையும் முடியும், மனச்சோர்வும் ஏற்படாது.
This story is from the June 17, 2026 edition of Kanmani.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Kanmani
Kanmani
தோண்ட தோண்ட குவாரி ஊழல்...
பஞ்ச பூதங்களில் மதிப்பு மிகுந்தது நிலம்.
3 mins
June 17, 2026
Kanmani
நிராகரிப்பின் வலி!
தமிழ்நாடு மாநில உச்ச கூட்டுறவு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளராக இன்று பணியாற்றும் கந்தசாமியின் முயற்சியை இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
2 mins
June 17, 2026
Kanmani
5 மினிட்ஸ் சேலன்ச்!
நேற்று இரண்டு நோயாளிகளைச் சந்தித்தேன்.
3 mins
June 17, 2026
Kanmani
வற்றாத வங்கி மோசடிகள்!
பலவித மோசடிகள் உலகில் இருந்தாலும் பணத்துக்காகவே மனிதர்கள் பெரும்பாலும் மோசடி செயல்களில் ஈடுபடுகின்றனர். அதிலும் பணம் புழங்கும் வங்கிகளில் நடக்கும் மோசடி அதிகம்.
3 mins
June 17, 2026
Kanmani
வீணாகும் தானியங்கள்... காரணம் என்ன?
பசி பட்டினியால் நாட்டில் தினம் தினம் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
1 mins
June 17, 2026
Kanmani
கூகுள் கொசு!
இன்று உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் நோய்களுக்கு அடிப்படை காரணம் என்னவென்றால் அது முழுக்க முழுக்க கொசுக்கள்தான்.
1 min
June 17, 2026
Kanmani
வீட்டுக்குள் தொற்று... தவிர்ப்பது எப்படி?
‘சுத்தம் சோறு போடும்’ என்பது சும்மா போகிற போக்கில் சொல்லப்பட்ட வாசகம் அல்ல.
3 mins
June 17, 2026
Kanmani
உண்மையாக கனெக்ட் ஆகணும்!
மிடில்கிளாஸ் குடும்பத்தில் இருந்து பல தடைகளை கடந்து திரையுலகில் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே...
2 mins
June 17, 2026
Kanmani
மனசுக்குள் ஓடினால் ஓ.கே. சொல்லிடுவேன்! - கல்யாணி பிரியதர்ஷன்
தனது திரை அனுபவங்கள், எதிர்கால திட்டங்கள் பற்றி கலர் கலர் கனவுடன் வலம் வரும் கல்யாணி பிரியதர்ஷன், தென்னக மொழி படங்களின் பேவரைட் பியூட்டி. எதைப்பற்றி கேட்டாலும் புன்முறுவலுடன் மனம் திறந்து பேசும் கல்யாணியுடன் ஒரு பேட்டி
2 mins
June 17, 2026
Kanmani
பரிமளா & கோ
மிடில் கிளாஸ் குடும்ப தலைவரான பரிமளாவுக்கு (ஜெயராம்), சுதந்திரம் (ஊர்வசி) என்ற மனைவி.
2 mins
June 17, 2026
Listen
Translate
Change font size

