Facebook Pixel இறவாதீஸ்வரர் கோயிலின் ஈடில்லா சிற்பங்கள் | Aanmigam Palan - religious-spiritual - Read this story on Magzter.com

Try GOLD - Free

இறவாதீஸ்வரர் கோயிலின் ஈடில்லா சிற்பங்கள்

Aanmigam Palan

|

July 01, 2023

காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 கோயில்களில் ஒன்றான 'அழியாத்தன்மையுடையது' என்ற பொருள் கொண்ட ‘இறவாஸ்தானம்', காஞ்சிபுரத்தில் அதிகம் அறியப்படாத பல்லவர் கால கோயில்.

- மது ஜெகதீஷ்

இறவாதீஸ்வரர் கோயிலின் ஈடில்லா சிற்பங்கள்

மாபெரும் கலா ரசிகனாக போற்றப்படும் இராஜசிம்மனின் (இரண்டாம் நரசிம்மவர்மன், பொ.ஆ. 700-729) கலைப் படைப்புக்களில் ஒன்றாகக்கருதப்படுகிறது. பல்லவர்களின் சிற்பத்திறமையை இவ்வுலகுக்கு எடுத்தியம்பும் உலகப்புகழ் பெற்ற பல குடைவரை கோயில்கள் இவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவையே.

நகரின் மையப்பகுதியில் சுற்றிலும் வீடுகள் சூழ்ந்திருக்க, கருவறை, அர்த்த மண்டபம், 16 தூண்களைக் கொண்ட மகாமண்டப அமைப்புகளுடன் கிழக்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது இவ்வாலயம்.

பல மணற்கற்களான சிற்பங்கள் கால ஓட்டம், வானிலை காரணமாக அரிக்கப்பட்ட நிலையிலும், ஒவ்வொரு கலை ஆர்வலர்களின் கண்களுக்கும் விருந்தாக உள்ளன.

வெளிப்புறச் சுவர்களை கால சம்ஹார மூர்த்தி மேலே சிவலிங் கத்தை கட்டியணைத்தபடி மார்க்கண்டேயர், கங்காவ தாரண மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி, தட்சிணா மூர்த்தி, சிவனின் விருச்சிக கர்ணம், ஜலந்தரனை வதம் செய்த பின்னர் யோக நிலையில் வீற்றிருக்கும் சிவன், பிக்ஷாடனர், கொம்புடன் காட்சியளிக்கும் துவாரபாலகர்கள், சங்கும் சக்கரமும் ஏந்திய பேரழகு துர்க்கை, கணேசர் போன்ற புடைப்புச்சிற்பங் களும், அழகிய மகர, சித்ர தோரணங்களும், சுவர்களின் மூலைப்பகுதியில் நின்றநிலையில் பெரிய சிம்மயாளி உருவங்களும் அலங்கரிக்கின்றன.

பூத கணங்களின் உருவங்கள் மிகவும் சிதிலமடைந்து சற்று தெளிவின்றி காணப்படுகின்றன. சிதைந்திருந்தாலும் சில சிற்பங்களின் எழில் தோற்றமும், சிற்ப நேர்த்தியும் காண் போரைக்கவர்கின்றன.

MORE STORIES FROM Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size