Facebook Pixel அகதிகளது எதிர்காலம் | Tamil Mirror - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அகதிகளது எதிர்காலம்

Tamil Mirror

|

June 20, 2025

ஜூன் 20, உலக அகதிகள் தினம்

- பெரியசாமிப்பிள்ளைசெல்வராஜ் முன்னாள் ராஜதந்திரி/ தூதுவர்

2024 ஆம் ஆண்டு சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 260 அகதிகளை ஏற்றிக் கொண்டு ஏடன் வளைகுடா வழியாக சென்ற படகொன்று ஏமன் கடற்கரை அருகே கவிழ்ந்ததில் சுமார் 49 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாகவும், ஏனையோர் பாதுகாக்கப்பட்டதாகவும் அதுபோல இம்மாதம் 17ஆம் திகதி தெற்கு இத்தாலியில் மத்தியதரைக் கடல் பகுதியில் பயணித்த இரண்டு படகுகள் கவிழ்ந்ததால் அதில் பயணித்த அகதிகளில் 11பேர் உயிரிழந்தும், 64 பேர் காணாமல் போனதாகவும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் மனதை நெருடுகின்றது.

கடந்த காலங்களில் தென்னாசிய நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியா,நியூசிலாந்து, போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் படகில் சென்ற மக்கள் பரிதாபகரமாக உயிரிழந்ததனையும் நினைவு கூறுதல் அவசியம்.

தான் இருந்த வீட்டையும், உறவினர்களையும், நாட்டையும் இழந்து தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலம் வேற்று தேசம் நோக்கி பயணிக்கும் அகதிகள் அடுத்தடுத்து கடலில் மூழ்கி மரணிக்கும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இவற்றையெல்லாம் நோக்கும்பொழுது எமக்கு ஒரு விடயம் புலனாகின்றது. அவர்கள் ஏன் தனது சொந்த தாயகத்தை விட்டு வெளியேற முயற்சிக்கின்றார்கள்?

உறவுகளை இழந்தவன் அனாதை. சொந்த தேசத்தை இழந்தவன் அகதி எனக் கூறப்படுவதுண்டு. உள்நாட்டு யுத்தங்களினால் பாதிக்கப்படுவோர் அனேகர்.நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களினாலும், பயங்கரவாதத் தாக்குதல்களினாலும் சிக்கி சின்னாப்பின்னம் ஆகுவோர் ஏராளம். அரசாங்கங்களின் அச்சுறுத்தல்களினால் அச்சத்துடன் வாழ்வோர் பலர். வறுமை, பசி, பட்டினி ஆகியவற்றால் வாழ்க்கையைக் கொண்டு செல்ல நித்தமும் போராடுவோர் எண்ணற்றவர்கள். இன, மத, அரசியல், கருத்து வேறுபாடு போன்ற இன்னோரன்ன காரணிகளினால், தமது தாய் நாட்டையே வெறுத்து வேறு நாடுகளுக்கு செல்ல எத்தனிப்போர் பலர்.

இயற்கையின் சீற்றத்தால் வாழ முடியாத நிலை ஏற்படுகின்ற பொழுது பிற நாடுகளுக்கு செல்ல முயல்பவர்களும் இதற்குள் அடக்கம்.

தம்மிடமிருக்கின்ற சேமிப்பையும், வாழ்வாதாரத்தையும். இருப்பிடத்தையும், உறவுகளையும், உதறித் தள்ளி விட்டு ஒருவர் வேறு நாட்டிற்குப் குடிபெயர்கின்றார் என்றால் அது எந்தளவுக்கு அவரது மனதில் ஒரு மாறா வடுவினை ஏற்படுத்தியிருக்கும் என்பதனை நோக்க வேண்டும்.

MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size