Try GOLD - Free
அமெரிக்காவில் மூன்றாவது கட்சி
Dinamani Virudhunagar
|July 17, 2025
இந்தியாவில் அரசியல் கட்சி தொடங்கப்படுவது என்பது புதிதல்ல. மாதத்துக்கு 4 கட்சிகள் வீதம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து செயல்படாத கட்சிகளை ரத்து செய்கிறது. இது இந்திய ஜனநாயகத்தின் ஓர் அம்சமாக திகழ்கிறது.
உலகின் மிகப் பழைமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் தொடங்கியுள்ள கட்சி அந்த நாட்டையும் தாண்டி பேசு பொருளாகியுள்ளது. ஏனெனில், அமெரிக்காவில் தனிநபர் ஒருவர் திடீரென அரசியல் கட்சியைத் தொடங்குவது என்பது மிகவும் அசாதாரண நிகழ்வு. அதுவும் யாருக்காக முழுமூச்சுடன் தேர்தல் பிரசாரம் செய்து அதிபர் பதவியில் அமரவைத்தாரோ, அதே டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளை விமர்சித்து 'அமெரிக்கா கட்சி' என்ற புதிய கட்சியை அறிவித்துள்ளார் எலான் மஸ்க்.
அமெரிக்காவை டிரம்ப் கடனில் தள்ளுகிறார் என்றும் அமெரிக்காவில் இப்போதுள்ள ஒற்றைக் கட்சி ஆட்சி முறை ஜனநாயகமே அல்ல என்பதும் மஸ்கின் வாதம். அனைவரும் கட்சி தொடங்கிய பிறகு தான் பொதுமக்களிடம் வாக்கு கேட்டுச் செல்வார்கள். ஆனால், மஸ்க் கட்சி தொடங்குவதா, வேண்டாமா என்பதையே எக்ஸ் வலைதளத்தில் தன்னைப் பின்தொடர்வோரிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்தார். எலான் மஸ்கை எக்ஸ் வலைதளத்தில் 22 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்; இதில் 65 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் புதிய கட்சி தொடங்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் குடியரசுக் கட்சி, ஜனநாயக கட்சியைத் தவிர வேறு பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிபராவது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். அந்த அளவுக்கு அந்த இரு கட்சிகளும் அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவ்விரு கட்சிகளின் சித்தாந்தங்களைத் தவிர வேறு எந்தக் கொள்கைகளும் அமெரிக்க மக்களை பெரிதாக ஈர்க்கவில்லை.
This story is from the July 17, 2025 edition of Dinamani Virudhunagar.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்
ரஷிய அதிபர் புதின்
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.
1 min
June 05, 2026
Dinamani Virudhunagar
பிரிவுகள் நிரந்தரமல்ல...
கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர்.
2 mins
June 05, 2026
Dinamani Virudhunagar
பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!
நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.
2 mins
June 05, 2026
Dinamani Virudhunagar
ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயர்த்திக் காட்டிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்
பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
June 05, 2026
Translate
Change font size
