Try GOLD - Free
மெய்ப்பொருள் காண்பது அறிவு!
Dinamani Virudhunagar
|June 20, 2025
பொதுவாகவே தவறான தகவல்கள், போலிச் செய்திகள் வேகமாகப் பரவும் தன்மையுடையவை. சமூக ஊடகங்கள் இந்தச் சூழலை இன்னும் இரட்டிப்பாக்குகின்றன. அசலைக் காட்டிலும் போலிக்கு வலிமை அதிகம். இப்படிப்பட்ட தவறான தகவல்கள் மனதில் இனம்புரியாத ஓர் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அண்மையில் குடும்பத்தினருடன் வெளிமாவட்டத்துக்கு சென்றபோது இணைய இடர்ப்பாடு ஏற்பட்டு 'கூகுள் மேப்' கைவிட்ட நிலையில், வாகனத்தை நிறுத்தி வழி கேட்டோம். ஒரு நபர் நம்பிக்கையுடன் நம்மிடம் பேசி, தீர்மானமாக ஒரு திசையை சுட்டி வழி காட்டினார். அவர் காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தபோது மாற்றுப் பாதையில் வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் எழுந்தது.
அதன்பிறகு, மற்றொரு நபரிடம் வழிகேட்டோம். முதல் நபர் சொன்ன பாதைக்கு நேர்மாறான எதிர்பாதையில் செல்லுமாறு அவர் வழிகாட்டினார். முதல் நபர் அத்தனை தீர்மானமாகச் சொன்னாரே, தற்போது யார் காட்டிய திசையில் செல்வது என்று உள்ளுக்குள் பெரும் குழப்பம். மூன்றாவது நபர் ஒருவரிடம் கேட்டுப் பார்ப்போம் என்று அவரிடம் விசாரித்ததில் இரண்டாம் நபர் சொன்ன பாதையை அவர் வழிமொழிந்து அந்தப் பாதையை தேர்ந்தெடுத்து பயணத்தைத் தொடர்ந்தோம்.
முதல் நபர் தவறாக வழிகாட்டியதால் நேரம் வீணாகிவிட்டதே என்று கவலை கொண்டாலும் தனக்கு நூறு சதவீதம் உறுதியாக தெரியாத ஒரு தகவலை, அவர் ஏன் அத்தனை தீர்மானமாக இருந்து வழி சொன்னார் என்ற கேள்வி நீண்ட நேரம் மனதைக் குடைந்தது.
ஒரு தவறான தகவல் எத்தனை வகையான அசௌகர்யங்களை ஏற்படுத்திவிடுகின்றன! ஒரு மனிதர் மீது நம்பிக்கை ஏற்பட்டு அவர் பகிர்ந்தவை உண்மையாகத்தான் இருக்கும் என்று நம் மனம் நம்பியதே பொய்த்துப் போகும் சூழ்நிலையில், யார் சொன்னது, எவர் சொன்னது என்று சிறிதளவும் தெரியாத ஒரு தகவலை எந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் பலருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வலிமையாகத் தோன்றியது.
சமூக வலைதளங்கள் நம் வாழ்வில் பெரும் பங்கு வகித்துவிட்ட இந்த நவீன யுகத்தில், நம்மைத் தொடர்புகொள்ள, தகவல்களைப் பகிர, செய்திகளைத் தெரிந்து கொள்ள எனப் பல்வேறு தேவைகளை அவை பூர்த்திசெய்கின்றன; எனினும், ஏராளமான தவறான தகவல்களும் கட்டுக்கதை களான செய்திகளும் வலம்வருகின்றன. சுமார் 70 சதவீதம் அளவுக்கு தவறான தகவல்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தங்களுக்கு வந்துசேரும் ஒரு தகவல் உண்மையா, பொய்யா எனத் தெரியாமல் பலரும் தொடர்ந்து பகிர்கின்றனர். அதனால் சில நேரங்களில் நம் மீது இருக்கும் நம்பகத்தன்மைகூட கேள்விக்குறியாகும் நிலை ஏற்படுகிறது. நாம் இப்படி பொதுவெளியில் பகிரும் நம்பகமற்ற தகவல்களினால் மறைமுகமாக சில பிரச்னைகள் முளைகின்றன என்பதை எத்தனை பேர் உணர்ந்துள்ளனர்?
This story is from the June 20, 2025 edition of Dinamani Virudhunagar.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.
1 min
June 08, 2026
Dinamani Virudhunagar
'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'
28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.
1 min
June 08, 2026
Dinamani Virudhunagar
6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை
பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்
1 mins
June 08, 2026
Dinamani Virudhunagar
மாற்றமே வெற்றிக்கான பயணம் !
நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
2 mins
June 08, 2026
Dinamani Virudhunagar
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்
கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ்.
2 mins
June 08, 2026
Dinamani Virudhunagar
அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
1 mins
June 08, 2026
Dinamani Virudhunagar
தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்
23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்
1 mins
June 08, 2026
Dinamani Virudhunagar
ஆளுநரை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை கண்டித்து சென்னையில் மதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
June 08, 2026
Dinamani Virudhunagar
இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
நேபாள வெளியுறவு அமைச்சர்
1 min
June 08, 2026
Dinamani Virudhunagar
பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
1 min
June 07, 2026
Translate
Change font size
