Try GOLD - Free
இந்திய பொருள்கள் மீது 27% வரி
Dinamani Virudhunagar
|April 04, 2025
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி
-
நியூயார்க், வாஷிங்டன், ஏப். 3: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 27 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் 'அமெரிக்க பொருள்கள் வர்த்தகப் பற்றாக்குறைக்கு பங்களிக்கும் வர்த்தக நடைமுறைகளைச் சரிசெய்ய பரஸ்பர வரியுடன் இறக்குமதிகளை ஒழுங்குபடுத்துதல்' என்ற தலைப்பிலான இந்த பரஸ்பர வரிவிதிப்பு உத்தரவை அதிபர் டிரம்ப் வெளியிட்டார். அதனுடன், இந்தியா உள்பட அமெரிக்க பொருள்கள் மீது அதிக இறக்குமதி வரியை விதிக்கும் 25 நாடுகள் மீது அமெரிக்கா சார்பில் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி விதிப்பு அட்டவணையையும் டிரம்ப் வெளியிட்டார்.
இந்த அட்டவணையில் இந்தியாவுக்கு 26 சதவீத வரி என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளபோதும், உண்மையில் இந்தியப் பொருள்கள் மீது சராசரியாக 27 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் அமெரிக்க பொருள்கள் மீது அதிகபட்சமாக 97 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் கம்போடியா நாட்டின் மீது 49 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக வியத்நாம் (90) மீது 46 சதவீதமும், இலங்கை (88) மீது 44 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பொருள்கள் மீது 67 சதவீத வரி விதிக்கும் சீனா மீது 34 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்க பொருள்கள் மீது 52 சதவீத வரி விதிக்கும் இந்தியா மீது 27 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
This story is from the April 04, 2025 edition of Dinamani Virudhunagar.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.
1 min
June 05, 2026
Dinamani Virudhunagar
பிரிவுகள் நிரந்தரமல்ல...
கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர்.
2 mins
June 05, 2026
Dinamani Virudhunagar
பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!
நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.
2 mins
June 05, 2026
Dinamani Virudhunagar
ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயர்த்திக் காட்டிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்
பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
June 05, 2026
Dinamani Virudhunagar
உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம்
உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min
June 05, 2026
Dinamani Virudhunagar
27 கருடசேவை ... 18 நவநீத சேவை!
பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.
1 mins
June 05, 2026
Dinamani Virudhunagar
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினர்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கைக்கெட்டாமலேயே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு அந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.
1 min
June 05, 2026
Dinamani Virudhunagar
2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை
தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 04, 2026
Dinamani Virudhunagar
இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.
1 min
June 04, 2026
Dinamani Virudhunagar
சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
June 04, 2026
Translate
Change font size
