Facebook Pixel கற்கத் தடம் அறிவோம்! | Dinamani Villupuram - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கற்கத் தடம் அறிவோம்!

Dinamani Villupuram

|

June 02, 2025

கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்துபோனால், கலந்தாய்வு வரை காத்திருக்க பயம்; தங்களுக்குப் பிடித்தமான தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை வாங்கி விடுகிறார்கள். அந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு கலந்தாய்வில் நல்ல கல்லூரி கிடைக்கும் என்று எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்காமல் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறத் துடிக்கிறார்கள்.

பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், தமிழ்நாடு அரசு, பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாபெரும் கோடைக்காலப் பயிற்சியை நடத்தியது.

நிகழ்வில் ‘உயர் கல்வியில் புதிய வாய்ப்புகளும், அரசின் திட்டங்களும்’ என்ற தலைப்பில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. திக்குத்தெரியாமல் தவிக்கும் மாணவர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த தெளிவைப் பெறவேண்டும். இவர்களில் கிராமப்புற மாணவர்கள் தகுந்த வழிகாட்டுதல் இன்றி தவித்துப்போகிறார்கள். ‘என்ன படிக்கலாம்?’ என்ற வழிகாட்டு நிகழ்ச்சிகள் அவர்களுக்காக நடத்தப்படுகின்றன.

கல்லூரிகள், அரங்குகள் அமைத்து மாணவர்களுக்கு வழிகாட்டின. யூடியூப் சேனல்களில் கல்வியாளர்கள் பேசுகிறார்கள். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைபெறுவது எப்படி?, அவர்கள் எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள், வேலை வாய்ப்பை அள்ளித்தரும் துறைகள் என்ன என்பது குறித்தும், மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், கல்வி உதவித்தொகை பெறும் முறைகள் என்று பல பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானவுடன் உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில் 14417 என்ற தகவல் மைய எண் அறிவிக்கப்பட்டது. கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் முறை, கல்விக் கட்டணம், உதவித் தொகை போன்றவை குறித்து வழிகாட்டுதல் பெறலாம். இது பள்ளிக் கல்வித் துறையின் சிறந்த முன்னெடுப்பாகும்.

நகர்ப்புறத்தில் உள்ள படித்த பெற்றோர் கல்லூரியின் உள்கட்டமைப்பு, கல்லூரியின் தரம், வேலைவாய்ப்பு, மாநில அளவில் கல்லூரியின் ரேங்கிங் ஆகிய பலவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து தங்கள் வாரிசுகளை சேர்க்கிறார்கள். பெண்கள் என்றால் விடுதிப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறார்கள். தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே கல்லூரியைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்கிறார்கள்.

MORE STORIES FROM Dinamani Villupuram

Dinamani Villupuram

ஆளுநர் மாளிகை முன் அடுத்தடுத்து போராட்டம்: தவெகவினர் கைது

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன் வெள்ளிக் கிழமை அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தி னர் கைது செய்யப்பட்ட னர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகியுள்ள நிலையில், அதனால் மாணவர்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி, மாணவர் தற்கொலை

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளியைச் சேர்ந்த மாணவி நிவேதிதா, கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப் பேட்டை குப்பநத்தத்தை சேர்ந்த மாணவர் மௌனிஷ் ஆகிய இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!

குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.

time to read

2 mins

May 09, 2026

Dinamani Villupuram

திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

உறவினர்கள் சாலை மறியல்

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநர் ஆர். வி. ஆர். லேகர் அவர்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் வாழ்த்து

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

தங்கம் பவுன் ரூ.1,13,200

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை

ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.

time to read

1 mins

May 09, 2026

Translate

Share

-
+

Change font size