Facebook Pixel அணு ஆயுதம் என்னும் அச்சுறுத்தல் | Dinamani Tiruppur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

அணு ஆயுதம் என்னும் அச்சுறுத்தல்

Dinamani Tiruppur

|

August 18, 2025

அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய போராக இரண்டாம் உலகப் போர் திகழ்கிறது. அணுகுண்டுகளால் ஜப்பானில் ஏற்பட்ட விளைவுகளை இரண்டாம் உலகப் போர் இன்னும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால், உலக நாடுகள் அணுகுண்டு தயாரிப்பதை ஐ.நா.வும், வல்லரசு நாடுகளும் எதிர்த்து வருகின்றன.

- உதயமு. வீரையன்

உலகம் எங்கும் ஆங்காங்கு பல நாடுகளில் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. போரின் இறுதியில் அமைதிப் பேச்சுவார்த்தையும் நடக்கிறது. அது முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முடிவில்லாத இந்தப் போரும், பேச்சுவார்த்தையும் எங்கே போய் முடியுமோ என்ற கவலையும் மக்களுக்கு ஏற்பட்டு விட்டது.

உலக வல்லரசான அமெரிக்காவும், ரஷ்யாவும் இந்தப் போர்களுக்குக் காரணமாக இருக்கின்றன. அவர்கள் தயாரித்து வைத்திருக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்காகவே போர்களைத் தூண்டி விடுகின்றன. இப்போது போர்கள் எல்லாமே ஏவுகணை களின் போர்களாகவே மாறி விட்டன.

கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் குறிப்பிட்ட இலக்கினைத் தாக்கி அழிக்கின்றன. பல காலமாகப் பாடுபட்டு எழுப்பப்பட்ட வானளாவிய கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் தகர்க்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. அழிப்பது எப்போதும் எளிய செயலாகும். அந்த நகரங்களைக் கட்டி எழுப்புவதற்கு எத்தனை காலமாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதற்குப் பின்னால் அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றை எடுத்துக் காட்டியே அச்சுறுத்தல்கள் நிகழ்கின்றன. அண்டை நாடான பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடாக இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 'குரங்கு கையில் கொள்ளியைக் கொடுத்த கதையே' நினைவுக்கு வருகிறது.

"எதிர்காலத்தில் இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்; பாகிஸ்தானைத் தாக்கினால் உலகின் ஒரு பகுதி அழிவைச் சந்திக்கும்..." என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீர் பேசியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அசீம் முனீருக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்பு விருந்து அளித்தார். இரண்டாவது முறையாக கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி அமெரிக்காவுக்கு அவர் அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொண்டார்.

MORE STORIES FROM Dinamani Tiruppur

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Tiruppur

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruppur

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruppur

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruppur

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tiruppur

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி

பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.

time to read

1 mins

June 11, 2026

Translate

Share

-
+

Change font size