Try GOLD - Free
சிறப்பு தீவிர திருத்தம் எனும் தேர்தல் பதற்றம்
Dinamani Tiruppur
|August 14, 2025
சிறப்பு தீவிர திருத்தம் என்பது குழப்பத்தையும், மோசமான சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படாதவரை குற்றவாளிகள் என்று பிகார் வாக்காளர்கள் கருதப்படுகிறார்கள். இது தவறான முன்னுதாரணமாக மட்டுமல்லாது சட்டத்தின் அடிப்படை விதிகளையும் மீறுகிறது.
பிகாரில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு தீவிர திருத்தம் என்பது ஜனநாயகம், சட்டத்தின் அடிப்படையிலான உலகளாவிய வாக்குரிமை முறையை மறுகட்டமைப்பதாகவே அமைகிறது. இந்த இயந்திரத்தனமான வாக்குரிமைப் பறிப்பு, நாட்டின் அதிகார மையம் நேர்மையாக செயல்படுவதாக வேடமிட்டுள்ளதையும், அரசமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுவதையும் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
ஜனநாயகத்தின் அடித்தளம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 326 ஆகும். அது சற்று தெளிவற்றதாகவும், சில கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதாகவும் அமைகிறது. தேர்தல்களில் வாக்களிக்க இந்திய குடிமகனாகவும் 18 வயதுக்கு குறையாதவராகவும் இருக்க வேண்டும். மனநிலை சரியில்லாதவர், குற்ற நடவடிக்கைகள், ஊழல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு உரிய சட்டங்களின்படி தண்டிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய உரிமை உண்டு.
இதில் 'வாக்காளராக பதிவு செய்ய உரிமை உண்டு' என்ற சொல், ஒரு தவிர்க்க முடியாத அரசமைப்பு உரிமையை உருவாக்கியுள்ளதுடன், வாக்களிக்கும் தகுதியை மறுக்கும் பொறுப்பை அரசுக்கு அளித்துள்ளது. இந்தப் பொறுப்பு உருவாக்கம் நான்கு மாறாத கொள்கைகளை உறுதிப்படுத்துகிறது. முதலாவதாக, வாக்குரிமை என்பது குடியுரிமையின் இயல்பாகவே அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட தகுதி.
இரண்டாவது வாக்களிப்பதற்கான தகுதியிழப்புகள் குறித்தானது. இதன்படி, அரசமைப்புச் சட்டத்தில் ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டால், குறிப்பிடப்படாத மற்ற விஷயங்கள் விலக்கப்பட வேண்டியவை என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மூன்றாவதாக ஒவ்வொரு தகுதியிழப்புக்கும் நீதித் துறை ஒப்புதல் தேவைப்படுகிறது. நீதிமன்ற அறிவிப்புகளின்படி மனநிலை சரியில்லாதவர், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சட்டப்பேரவையால் தகுதி நீக்கப்பட்டவர் அல்லது அரசின் பிற நிர்வாக அமைப்புகளால் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கவில்லை என்று அறிவிக்கப்படுவது.
இவை தவிர, பிற வேறு எந்த அமைப்புகளும், விதிகளும் யாருடைய வாக்குரிமையையும் தகுதிநீக்கம் செய்ய முடியாது.
This story is from the August 14, 2025 edition of Dinamani Tiruppur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruppur
Dinamani Tiruppur
குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்
முதல்வர் விஜய் அறிவிப்பு
1 mins
June 13, 2026
Dinamani Tiruppur
ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
1 min
June 13, 2026
Dinamani Tiruppur
உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!
'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.
1 mins
June 13, 2026
Dinamani Tiruppur
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் அம்மனை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, 1.6 கிலோ எடையிலான வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.
1 min
June 13, 2026
Dinamani Tiruppur
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்
எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்
1 min
June 13, 2026
Dinamani Tiruppur
போப்பாண்டவரின் எச்சரிக்கை!
மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.
2 mins
June 13, 2026
Dinamani Tiruppur
அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?
'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
June 13, 2026
Dinamani Tiruppur
தொடங்கியது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்
ஐசிசி-யின் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
June 13, 2026
Dinamani Tiruppur
தாய்லாந்து இளவரசி காலமானார்
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலாங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டின் முன்னணி சட்டநிபுணருமான இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (47) நீண்டகால உடல்நலக் குறைவால் காலமானார்.
1 min
June 13, 2026
Dinamani Tiruppur
வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா
மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.
1 min
June 13, 2026
Translate
Change font size

